Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய அணியின் 'கேம் ஃபினிஷர்' மணீஷ் பாண்டே!

'த்தன நாளா நீ எங்கய்யா இருந்த ..?'னு சிங்கம் படத்துல விஜயகுமார்,  சூர்யாவ கேக்குற மாதிரி இன்னிக்கு ஆடி கெத்து காட்டியுள்ளார் மணீஷ் பாண்டே.

அறிமுகமான முதல் போட்டியிலேயே 71 ரன்கள், ஜாதவுடன் இணைந்து 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் என தெறி பர்ஃ பார்மென்ஸ்  கொடுத்தார். ஆனால் அது ஜிம்பாப்வே தொடர்.  அதன் பின் இந்தியா சென்ற பெரிய அணிகளுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒரு போட்டி அரை சதம். அதோடு அணியில் இடம் பிடிக்காமல் இருந்த பாண்டே, ரெய்னாவுக்கு பதிலாக பாண்டேவை ஆஸிக்கு அழைத்து சென்றது இந்திய அணி. முதல் இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் ரோஹித், கோலி ஆட்டத்தால் களமிறங்க முடியாமல் போனது.  2வது ஆட்டத்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் நீக்கப்பட்டார். கடைசி ஒருநாள் போட்டியில்,  காயம் காரணமாக ரஹானே வெளியேற,  கெத்தாக களமிறங்கி ரோஹித்துடன் 97 ரன்கள், தோனியுடன் 94 ரன்கள் குவித்தது மட்டுமில்லாமல்,  104 ரன்கள் அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார்.

மணீஷ் பாண்டே இந்த தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த புதிய வீரர் அல்ல.  இவர் ஏற்கெனவே பல இந்திய முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்த்தவர். 2008-ம் ஆண்டு உலகக் கோப்பையை  வென்ற கோலி தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில்,  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,  ஐ.பி.எல் போட்டிகளில் இடம்பிடித்தார்.  பெங்களுரு அணிக்காக ஆடிய மணீஷ் பாண்டே,  2009-ம் ஆண்டு சதமடித்து, ஐ.பி.எல். போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

 

முதல் தர போட்டிகளில் 16 சதம் உட்பட 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள மணீஷ் பாண்டே,  இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும் விதமான இன்னிங்ஸை ஆடியுள்ளார்.  இந்த ரன் சீஸ் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அடுத்து வரும் தொடர்களில் மணீஷ் கலக்கும் பட்சத்தில், நடுவரிசையில் ஒரு கில்லியாக திகழ்வார் மணீஷ் பாண்டே

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close