Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது தான் கடைசி போட்டியா ஆஸி நிருபரின் கேள்விக்கு தோனியின் பதில் என்ன? - வீடியோ

ஆஸ்திரேலிய தொடரை  4-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. கடைசி போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது இந்தியா. போட்டிக்கு பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் தோனியிடம் 'இது தான் உங்கள் கடைசி ஒருநாள் போட்டியா என்ற கேள்வியை ஆஸி நிருபர் ஒருவர் எழுப்பினார். அதற்கு தோனி அளித்த பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.



இந்த கேள்வியை முதல் கேள்வியாக எதிர்கொண்ட தோனி சிரித்துக்கொண்டே ' இதற்கு நீங்கள் பொது விருப்ப மணு தாக்கல் செய்து தான் கேட்க வேண்டும். இதற்கு என்னிடம் பதிலில்லை என பதிலளித்து கேப்டன் கூலாக தன்னை நிருபித்துள்ளார். மேலும் மணீஷ் பாண்டே குறித்தும், பூமராஹ் பந்துவீச்சும் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளனர். இதனை தொடருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

பின்னர் ஸ்பைடர் கேம் பயன்பாடு குறித்த கேள்விக்கு ' நான் ட்ரெடிஷனல் கிரிக்கெட்டர். விளையாட்டை பாதிக்கும் எந்த விஷயத்துக்கும் நான் ஆட்டத்தில் வாய்ப்பளிக்க மாட்டேன். இது பார்வையாளர்களுக்கான ஆட்டம் என்றாலும், சில விஷயங்களை அனுமதிக்க மாட்டோம் என்றார். இதனால் பார்ப்பவருக்கு என்ன 2000 டாலரா கிடைக்க போகிறது. ஒரு வீரர் அவுட் ஆனா பிறகு காலுக்கு கீழ் கேமராவை காட்டுவதால் 2000 டாலர் கிடைக்கும் என்றால் தவறில்லை என நக்கலாக கூறினார்.

 

India captain MS Dhoni addressed the media after the 5th ODI at the SCG #AUSvIND

Posted by Indian Cricket Team on 23 January 2016


உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் முடிந்தும் இதே கேள்வியை தோனி ஆஸ்திரேலியாவில் எதிர் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ