Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனி ஒருவனை கிரிக்கெட் உலகம் மிஸ் செய்ய 7 காரணங்கள்!

ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது. களத்தில் இவரது வினோதமான பேட்டிங் ஸ்டைலை ரசிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி நிற்கும் மனிதர் பந்து வீச்சாளரின் வேகத்துக்கு ஏற்ப ஸ்டெம்புகளை நோக்கி நகர்ந்து பந்தை பவுண்டரிக்கு விரட்டுவது கிரிக்கெட்டின் கிளாசிக் ஷாட்களில் ஒன்று. இதற்கு சொந்தக்காரர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிவ் நாராயண் சந்தரபால் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு கிளாசிக் கிரிக்கெட்டர். அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இவரை கிரிக்கெட் உலகம் இந்த 7 காரணங்களுக்காக கட்டாயம் மிஸ் செய்யும்.தனி ஒருவன்!

மிகப்பெரிய ஜாம்பவான்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு கட்டத்தில் அனைவருமே ஒய்வு பெற்ற போது, ஒற்றை ஆளாக வெஸ்ட் இண்டீஸின் நடு வரிசையை சமாளித்தவர். ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த வெண்டும் என்றால் சந்தர்பாலை அவுட் ஆக்கினால் போதும் என மற்ற அணிகள் உத்திகளை வகுக்கும் அளவுக்கு அணியின் தவிர்க்க முடியாத வீரர் இவர். தனி ஒரு ஆளாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் கில்லி.


ஸ்டைல்!


இவரது பேட்டிங் ஸ்டைல் மற்ற வீரர்களிடமிருந்து வித்தியாசமானது. மூன்று ஸ்டெம்புகளையும் காட்டி ஆடுவது, ஆட்டத்தை துவங்கும் போது ஸ்டெம்பை எடுத்து மைதானத்தில் சிறிய அடையாளமிட்டு அந்த ஸ்டெம்பை மையப்படுத்தி ஆடுவது என சர்வதேச கிரிக்கெட்டின் ஸ்டைலிஷ் ப்ளெயர்களில் ஒருவர். நீண்ட நாட்கள் இவரது கன்னத்தில் இருந்த டாட்டூவும் இவரது ஸ்டைல்களில் ஒன்று.

பேட்டிங் புலி!


அனைவரும் இவரை மிகச் சிறந்த டெஸ்ட் ப்ளேயர் என்று கூறுவர். அதற்கேற்றார் போல் 2002ம் ஆண்டு இந்தியாவை ஆன்டிகுவா டெஸ்டில் அழுக விட்டவர் 510 பந்துகளை சந்தித்து 11 மணி களத்தில் இருந்து நான்காவது டெஸ்ட்டை ட்ரா செய்தார். இந்திய கேப்டன் கங்குலி சந்த்ரபாலை அவுட் செய்ய முடியாமல் தவித்ததற்கு உதாரணம் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா உட்பட 11 போரையும் பந்துவீச வைத்தது தான். அணியின் அனைத்து வீரர்களும் பந்து வீசியும் சந்த்ரபாலை வீழ்த்த முடியவில்லை. அடுத்த வருடமே 69 பந்துகளில் ஆஸிக்கு எதிரான டெஸ்ட்டில் சதமடித்து தன்னால் விரைவாக ரன் குவிக்க முடியும் என்பதை நிருபித்தார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் விரைவான சதத்தை பதிவு செய்தவர்களில் 4ம் இடத்தில் உள்ளார்.மிஸ்டர் கன்சிஸ்டெண்ட்!


ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் என போட்டியின் வடிவத்துக்கு ஏற்ப தன்னை மாற்றி ஆடும் சந்தர்பால் தொடர்ச்சியாக நீண்ட நாட்கள் ஒரீ மாதிரியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். சர்வதேச வீரர்கள் அனைவரும் தடுமாறும் இந்திய, இலங்கை, பாகிஸ்தான் ஆடுகளங்களில் அசால்ட்டான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சந்தர்பால். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு உதவும் இந்திய ஆடுகளங்களில் மீட்ஸ் வின்னராக இருந்தவர் சந்தர்பால்.

வெஸ்ட் இண்டீசின் ட்ராவிட்!


சர்வதேச கிரிக்கெட்டில் அழிக்க முடியாத பெயர்களில் ஒன்று ட்ராவிட். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கொடிகட்டி பறந்த சர் விவ் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், லாராவுக்கு பிறகு ஒரு சிறந்த பேட்ஸ் மென் நீண்ட நாட்கள் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஆடியுள்ளார் என்றால் சந்தர்பால் மட்டுமே. 20 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரர் சந்தர்பால்.போராளி!


2008ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான டெஸ்ட்டில்  பிரட் லீ வீசிய பந்து சந்த்ரபாலின் ஹெல்மெட்டை தாக்கியது அதிலிருந்து மீண்டு அதே இன்னிங்க்சில் சதமடித்தார். அதே தொடரில் டெஸ்ட் வரலாற்றின் மிகப்பெரிய ரன் சேஸான 418ல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தவர் சந்தர்பால் தான். இலங்கைக்கு எதிரான ஒருனாள் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன் தேவைப்பட்ட போது சமிந்தா வாஸ் பந்தை சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி த்ரில் வெற்றி பெற வைத்தவர் இவர்.

கடைசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி!


இவரது கடைசி ஒருநாள் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மறக்க முடியாத சம்பவங்கள் நிறைந்தது. 2011ம் ஆண்டு உலககே கோப்பை காலிறுதி போட்டி. பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஸ்கோர் சந்தர்பால் தான். கடைசி டெஸ்ட் போட்டியில் சந்தர்பால் டக் அவுட் ஆகியதும் அவரது இன்னிங்ஸில் அழியாத இடம் பிடித்தவை. லாராவை முந்த 86 ரன்கள் தேவை என்ற போது  இறுதி வாய்ப்பு அளிக்காமல் சந்தரபாலை ஓரங்கட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

 

 இன்னும் ஒரு டெஸ்ட் ஆடியிருந்தால் லாராவை ஓவர் டெக் செய்து இருப்பார். வெஸ்ட் இண்டீஸ் சம்வீரர்கள் சம்பள பிரச்னையில் சிக்கி தவித்த போது அணியில் இருந்த ஒரே சீனியர் இவர் தான். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் இவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி கெத்தான வழியனுப்புதலை செய்திருக்க வேண்டும்.

கிளாசிக் கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர் சந்தர்பாலை நிச்சயம் கிரிக்கெட் மிஸ் செய்யும், மிஸ் யூ சந்தரபால்.

ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ