Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ!

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இந்தியா வந்துள்ளார். கோழிக்கோட்டில் நடைபெறவுள்ள  கால்பந்து தொடரை தொடக்கி வைக்க வந்த அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
 

கோழிக்கோட்டில் சையத் நாகிஜி கால்பந்து தொடர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை தொடங்கி வைக்க இந்தியா வருமாறு ரொனால்டினோவுக்கு போட்டி அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் பிப்ரவரி 5ஆம் தேதி அவருக்கு சர்வதேச சுற்றுப்பயணங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது.

ஆனாலும் போட்டி அமைப்பாளர்களின் அழைப்பை ஏற்று சற்று முன்னதாக வந்து போட்டியை தொடக்கி வைக்க ரொனால்டினோ ஒப்புக் கொண்டிருந்தார். தொடர்ந்து நேற்று கோழிக்கோடு வந்த அவருக்கு ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டு வரவேற்பளித்தனர். பின்னர் போட்டியை தொடக்கி வைக்கும் விதமாக சையத் நாகிஜி டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

விழாவில் ரொனால்டினோ பேசுகையில், ''கால்பந்து உலக மக்களை இணைக்கும் கருவி. நட்பையும் வளர்க்கும் ஒரு குளோபல் ஸ்போர்ட் ''என்றார்.  இந்த கால்பந்து தொடருக்கு ரொனால்டினோ பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். சையது நாக்ஜி கால்பந்து தொடரில் ஐரோப்பா, தென்அமெரிக்க கிளப்புகள் உள்பட 21 அணிகள் பங்கேற்கின்றன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ