Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

முதல் 20-20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா, 189 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. இதன் மூலம் முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆஸி தரப்பில் பின் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி 44 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த நடு வரிசை வீரர்கள் சொதப்பியதால் ஆஸி 151 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய தரப்பில் பாண்டயா, ஜடேஜா,அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பும்ராஹ் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ரெய்னா டி20 போட்டியில் 1000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சிறப்பாக ஆடி 90 ரன்கள் குவித்த துணைக் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 இந்தியா - ஆஸி., இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அடிலெய்டில் நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான அணியில் யுவராஜ் சிங், ஆஷிஸ் நெக்ரா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
 


போட்டியை அதிரடியாக துவங்கியுள்ளது இந்தியா குறிப்பாக ஷான் டெயிட் பந்துவீச்சை சிக்ஸர் பறக்க விட்டார் ரோஹித் ஷர்மா. பின்னர் வாட்சன் ஒரே ஓவரில் இந்திய துவக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றினார். அதன்  பின் விஸ்வரூபம் எடுக்க துவங்கிய இந்திய துணைக் கேப்டன் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் குவித்தனர். சுரேஷ் ரெய்னா கடைசி ஓவரில் 41 ரன்களில் வெளியேறினார்.



கோலி 55 பந்துகளில் 90 ரன்களும், தோனி 3 பந்தில் 11 ரன்களும் குவித்து  20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. ஆஸி அணியில் வாட்சன் தவிர அனைவரது பந்துவீச்சையும் அடித்து நொறுக்கின்ர் இந்திய வீரர்கள். ஆஸி அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ