Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலிக்கு அடிலெய்டில் ஸ்டாண்ட் வைப்பார்கள் தோனி பெருமிதம் - வீடியோ

முதல் டி20 போட்டியில் அபார வெற்றியை இந்தியா பதிவு செய்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் தோனி, விராட் கோலி பற்றிய ஆஸி நிருபரின் கேள்விக்கு அவரை பாராட்டும் விதமான பதிலை அளித்தார்.

கோலி ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஆடும் விதம் குறித்து கேட்டதற்கு ''அவர் ஓய்வு பெறுவதற்குள் ஆஸ்திரேலியாவில் குறிப்பாக அடிலெய்டில் ஒரு ஸ்டாண்டிற்கே கோலியின் பெயரை வைப்பார்கள். ஏனெனில் அவ்வளவு ரன்களை அவர் ஆஸியில் குவித்துள்ளார். அதனால் தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியால் தொடர்ந்து முன்னிலையில் இருக்க முடிகிறது'' என்றார்.


ஆட்டத்தின் நடுவே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அம்பயருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டாரே கோலி என கேட்டதற்கு ' இதில் எங்கிருந்து வந்தார் ஸ்மித், அவருக்கும் அம்பயருக்குமான உரையாடல், இதனை பற்றி இங்கு விவாதிக்க வேண்டாம் எனக்கூறி அந்த கேள்வியை முடித்தார்.

 

India captain MS Dhoni addresses the media after the first T20I at Adelaide #AUSvIND

Posted by Indian Cricket Team on 26 January 2016


மேலும்  பாண்ட்யா, பூமராஹ் பற்றியும் , அவர்கள் இன்னும் நிறைய கற்று கொள்ள வெண்டும் என்றும் கூறினார். அணியில் யுவராஜ் பொன்ற 4 ஓவர்கள் மற்றும் நாடு வரிசையில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள் வேண்டும் என்றும் கூறினார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ