Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சைக்கில் ஓட்டியபடி 'ரூபிக்ஸ் கியூப்' விளையாட்டில் சாதனை! (வீடியோ)

சாதனை புரிவதே கடினம்;  அதிலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவது என்பது இன்னும் கடினம்.  அந்த வகையில்,  சி எம் சி மருத்துவக்கல்லூரியில் Msc மெடிக்கல் ஃபிசிக்ஸ் பயின்று வரும் வேலூரை அடுத்து பாகாயத்தை சேர்ந்த வின்பிரண்ட்ஸ் மைக்கேல் என்பவர்,  'ரூபிக்ஸ் கியூப்' என்ற விளையாட்டில்,  உலகளவில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் பெங்களூரை சேர்ந்த ஒருவர்,  2014-ல் ரூபிக்ஸ் விளையாட்டில்,  1 மணி நேரத்தில் 66 முறை செய்ததே  கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம் பிடித்தது.

இந்த போட்டியில் தகுதி பெற வேண்டும் என்றால்,  1 மணி நேரத்தில் 30 முறை செய்து முடிக்க வேண்டும்.  ஆனால் பாகாயம் மைதானத்தில்,  26-01-2016 அன்று 2 மணி நேரம் 3 நிமிடத்தில் சைக்கிள் ஓட்டியவாறே  111 முறை ரூபிக்ஸ் கியூப்பை சேர்த்து,  உலகளவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் மைக்கேல். இதில் கின்னஸ் பிரதிநிதிகளாக விக்ரம்மட, விவேக் பிரசாத்மட  கலந்துகொண்டனர்.


 


-ம.சுமன்
(மாணவ பத்திரிக்கையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ