Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டில் இந்திய தேசியக்கொடியை பறக்க விட்ட விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகர் கைது!

ந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுக்க லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் விராட் கோலிக்கு உண்டு. பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த, பிஷ்மா மருஃவா கூட நம்ம கோலியின் தீவிர ரசிகைதான்.

இந்நிலையில் நேற்று  இந்திய அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியை, பாகிஸ்தானிலும்  ஏராளமான விராட் கோலி ரசிகர்கள் பார்த்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில்,  உமர் ட்ராஸ் என்பவர், விராட் கோலியின் தீவிர ரசிகர். நேற்றையை போட்டியில் தனது ஹீரோ ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசி தள்ளியதாலும், அதனால், இந்திய அணி வெற்றி பெற்றதாலும்  உற்சாகமடைந்த  உமர், தனது வீட்டின் மேல் இந்திய தேசியக் கொடியை பறக்க வீட்டுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், உமர் வீட்டில் இந்திய தேசியக் கொடி பறப்பது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து உமர் வீட்டுக்கு வந்த போலீஸ், இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி கைப்பற்றினர். அத்துடன் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.வீட்டில் இருந்த விராட் கோலியின் படங்களையும் கைப்பற்றி கொண்டு சென்றனர்.உமரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  உமர்  மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து உமர் கூறுகையில், ''விராட் கோலியின்  தீவிர ரசிகன் நான். அதன் காரணமாகவே இந்திய தேசியக் கொடியை எனது வீட்டில் பறக்க விட்டேன். எனது அபிமான கிரிக்கெட் வீரர் மீது அன்பை வெளிப்படுத்தும்விதமாக இதனை செய்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது. என்னை இந்திய கிரிக்கெட் ரசிகராக மட்டும்தான் பார்க்க வேண்டும்.நான் என்ன கொலையா? செய்து விட்டேன். மன்னிப்பும் கேட்க முடியாது'' என கூறியுள்ளார்.
 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close