Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் களமிறங்கும் ஜூனியர் ஷூமேக்கர்!

ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில், ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கர். இவர்,  இந்தியாவில் நடக்கவிருக்கும் எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் நடக்கும் இப்போட்டியில்,  பல முன்னாள் வீரர்களின் வாரிசுகளும் பங்கேற்கவுள்ளனர்.

ஃபார்முலா ஒன் வரலாற்றில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமேக்கர், பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்று மீண்டவர். அவரது மகனான 16 வயது மிக், இதுவரை 22  'ஃபார்முலா 4' பந்தயங்களில் பங்கேற்று,  1 பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். ‘வேன் அமர்ஃபூட் ரேசிங்’ அணிக்காக பங்கேற்றுவரும் மிக் ஷூமேக்கர், ஐரோப்பாவிற்கு வெளியே போட்டிகளில் கலந்து
கொள்வது இதுவே முதல் முறை.



அணிவகுக்கும் வாரிசுகள்

அபுதாபி, பஹ்ரைன் ரேஸ்களைத் தொடர்ந்து,  இந்த சீசனின் நான்காம் போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது. இப்போட்டியின் பரிசுத் தொகையாக 64 லட்ச ரூபாய் தரப்படவுள்ளது. இந்தப் போட்டியில் ஷூமேக்கரின் மகன் மட்டுமின்றி,  இரண்டு முறை எஃப் 1 பட்டம் வென்ற எமர்சன் ஃபிட்டிபார்டியின் பேரன் பீட்ரோ ஃபிட்டிபார்டி, எஃப்1 டிசைனர் ஆட்ரியன் நியூவியின் மகன் ஹாரிசன் நியூவி மற்றும் ஜீன் ஆலேசியின் மகன் கில்லியானோ அலேசி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இவர்களுள் பீட்ரோ ஃபிட்டிபார்டி,  இத்தொடரில் 168 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார். இந்தியாவின் சார்பில் தருண் ரெட்டி இப்போட்டியில் களம் காண்கிறார். இப்போட்டியில் இவர் வெல்வார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். இப்போட்டியில் வெல்வதன் மூலம் தருண் ரெட்டி,  அடுத்த சீசன் முழுவதிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறலாம்.

இந்நிலையில் இந்திய ஃபார்முலா ஒன் பந்தய ரசிகர்களின் மொத்த கவனமும் மிக்கின் மீது திரும்பியுள்ளது. தந்தையைப் போல்,  தானும் ஒரு சிறந்த வீரர் என்பதை நிக் நிரூபிப்பாரா? தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். 

தன் தந்தையின் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வாரா நிக்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திர்கையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close