Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரேலிய ஓபன் : சானியா, ஹிங்கிஸ் இணை சாம்பியன்!

ஸ்திரேலிய ஓபனில் மகளிர் இரட்டையரில் சானியா மிர்ஷா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றுள்ளது.

மெல்போர்னில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சானியா மிர்ஷா,  ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை,  செக் குடியரசுவை சேர்ந்த அன்ட்ரியா, லூஸி ஹரடெக்கா இணையுடன் மோதியது.

முதல் செட்டை,  சானியா இணை  7-6 என்ற கணக்கில் டை பிரேக்கரில் கைப்பற்றியது. அடுத்த செட்டை,  6-3 என்று அதிரடியாக வென்று பட்டத்தை வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா - ஹிங்கிஸ் இணை பெற்ற 36வது வெற்றி இது. 

ஏற்கனவே விம்பிள்டன், அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம்  பட்டங்களை வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி,  3வதாக ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close