Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸி மண்ணில் இந்தியா தெறி வெற்றி! தொடரை கைப்பற்றியது தோனி அண்டு கோ

185 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணி,  அதிரடியான ஆரம்பத்தை கொடுத்தாலும், பின்ச் தவிர மற்றவர்கள் சொதப்பியதால்,  20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன் குவித்தது. இதன் மூலம் இந்த ஆட்டத்தையும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 

ஜடேஜா, பூம்ராஹ்  2 விக்கெட்டுகளையும், யுவராஜ், பாண்ட்யா, அஸ்வின், நெஹ்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். யுவராஜ் பந்தில் மேக்ஸ்வெல் அவுட் ஆனதுதான் இன்றைய ஆட்டத்தில் தெறி ஹைலைட்.
 

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக ஆடி,  ஆஸி அணிக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி அரை சதமும், தவான் 42 ரன்களும் குவித்தனர். ஆஸி அணி தரப்பில் மேக்ஸ்வெல், டை தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


டாஸ் வென்ற ஆஸ்திரேலியா,  பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சென்ற போட்டியில் வென்ற அதே அணியே இந்த போட்டியிலும் களமிறங்கியது.

ஏற்கெனவே இந்திய மகளிர் அணியும் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ