Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனியை நிம்மதி பெருமூச்சு விட வைத்த உச்ச நீதிமன்றம்!

ந்து கடவுள் மகாவிஷ்ணு போல அட்டைப்படம் வெளியிட்டது தொடர்பாக  இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது ஆந்திர நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கில்  நடவடிக்கைக்கு எட்டு வாரங்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பிசினஸ் டுடே இதழில் தோனி இந்து கடவுள் மகாவிஷ்ணு போன்று அட்டைப்படத்தில் போஸ் வெளியிடப்பட்டது. இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தியதற்காக கேப்டன் தோனி மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக, கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னர் தோனி சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அவருக்கு அனுப்பப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை இன்னமும் அவருக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தற்போது இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருவாதகவும் தெரிவித்தனர். இதனை ஏற்று கொண்ட நீதிமன்றம், அவருக்கு அனுப்பிய பிடியாணையை திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  தோனி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் , ''தான் எந்த பத்திரிக்கைக்கும் போஸ் அளிக்கவில்லை எனவும், பத்திரிகையில் அவ்வாறு வெளி வந்த பிறகு தான் தனக்கே தெரியும் எனவும், தான் எந்த கிரிமினல் குற்றமும் புரியவில்லை '' எனவும் கூறியிருந்தார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தோனி மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவிட்டனர். மேலும், தோனிக்கு எதிராக மனு தாக்கல் செய்த ஷ்யாம் சுந்தர் தனது மனு
தொடர்பாக விளக்களிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில போலீஸார் 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஆடி வரும் தோனி தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்டடி 20 தொடரில் முதல் இரண்டு போட்டியில் வெற்றி  பெற்று தொடரை வென்ற நிலையில் இந்த இடைகால தடை அவருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
 

-பிரேம் குமார் எஸ்.கே.

மாணவ செய்தியாளர்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ