Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

T-20 இந்தியா அபார வெற்றி: தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி T-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பிற வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க, வாட்சன் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். அவர் 86 பந்துகளில் 124 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். அதில் 6 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை குவித்தது.

பின்னர் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி ஆரம்பம் முதலே அடித்து விளையாடியது. தொடக்க வீரர்கள் தவனும், ரோஹித் சர்மாவும் 3.2 ஓவர்களில் 46 ரன்கள் குவித்தனர். தவன் 9 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனிடையே ரோஹித் சர்மா 38 பந்துகளில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி சரியாக 50 ரன்கள் குவித்திருந்த நிலையில் எதிர்பாரதவிதமாக 'போல்ட்' ஆனார்.

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தை யுவராஜ் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்து சிக்ஸருக்கு பறந்தது. அடுத்த பந்தில் 'பை'யாக ஒரு ரன் கிடைத்தது. நான்கவது மற்றும் ஐந்தாவது பந்தில் ரெய்னா தலா 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசிப் பந்தில் ரெய்னா 4 ரன் விளாச இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு நாள் போட்டி தொடரில் தோல்வியடைந்த நிலையில், இருபது ஓவர் போட்டியில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஓயிட் வாஷ் செய்தது தொடரை கைப்பற்றியது. கோப்பை பெற்ற டோனி வழக்கம் போல் இளைய வீரர்களிடம் கொடுத்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ