Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடைசி ஓவரில் சிங்கமாக மாறிய யுவராஜ் : டி20 டாப் டென் ரன் சேஸிங்!

ஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வெற்றி இலக்கை அசாத்தியமாக கடந்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவையென்ற நிலையில், அதுவரை பம்மிக் கொண்டிருந்த யுவராஜ் சிங், கடைசி ஓவரில் விளாசினார். இந்த ஓவரில் யுவராஜ் சிங் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க வெற்றி இந்திய அணி பக்கம் சாய்ந்தது.

ஏற்கனவே டி20 தொடரை கைப்பற்றி விட்டாலும், ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் வொயிட் வாஷ் செய்ய, யுவராஜின் கடைசி நேர அதிரடியும் ஒரு காரணம். டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை, 7 வது சிறந்த ரன் சேஸிங் இதுவாகும். அதற்கு விராட் கோலியும் ரோகித்தும் வித்திட்டால், யுவராஜும் சுரேஷ் ரெய்னாவும் முடித்து வைத்தார்கள்.

 டாப் டென் ரன் சேசிங்

ஜோகனஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்ஆப்ரிக்க அணி நிர்ணயித்த 236 ரன்களை விரட்டி சென்று வெற்றி பெற்றதே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

மொகாலியில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜேகான்ஸ்பர்க்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிராக தென்ஆப்ரிக்க அணி  208 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஹாமில்டன் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே அணியை 202 ரன்கள் அடித்து தோற்கடித்தது.

ராஜ்கோட்டில் நடந்த மோதலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 202 ரன்கள் அடித்து வீழ்த்தியது.

தரம்சலாவில் நடந்த ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணி இந்திய அணிக்கு எதிராக 200 ரன்கள் அடித்து வெற்றி கண்டது.

சிட்னியில் நேற்று நடந்த மோதலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா 200 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 197 ரன்கள் எடுத்து தோற்கடித்தது.

நெதர்லாந்து அணி அயர்லாந்துக்கு எதிராக 193 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே அணியை 191 ரன்கள் அடித்து வீழ்த்தியது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ