Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை : செல்சி கேப்டன் ஜான் டெர்ரி விலகல்!

டப்பு சீசன் முடிவடைந்ததும் செல்சி அணியில் இருந்து விலகவுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜான் டெர்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு முதல் செல்சி அணிக்காக ஜான் டெர்ரி விளையாடி வருகிறார். செல்சி ஜுனியர் அணியில்  ஜான் டெர்ரி இணையும் போது அவருக்கு வயது 14 . இந்த 17 ஆண்டுகளில், ஜான் டெர்ரி தலைமையில்  கடந்த 2012ஆம் ஆண்டு செல்சி பேயர்ன்மியூனிச்சை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் லீக்கில் செல்சி வென்ற ஒரே கோப்பை இதுதான். அத்துடன்  5 முறை எப்.ஏ கோப்பையும் பிரீமியர் லீக் பட்டத்தை 4 முறையும் செல்சியுடன் ஜான் டெர்ரி வென்றிருக்கிறார்.

செல்சி அணிக்காக பிரீமியர் லீக்கில் மட்டும் 477 போட்டிகளில் ஜான் டெர்ரி  விளையாடியுள்ளார். ரேயன்கிக்ஸ், பால் ஸ்கோல்ஸ்  மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் ஜேமி கேரகார், ஸ்டீவன் ஜெரார்ட் லிவர்பூல் அணிக்காகவும் இவரை விட அதிக பிரீமியர் லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள பிற வீரர்கள். ஒட்டு மொத்தமாக 696 போட்டிகளில் செல்சி அணிக்காக விளையாடியுள்ள டெர்ரி, பிரீமியர் லீக்கில் மட்டும் அந்த அணிக்காக 40 கோல்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்துள்ள தடுப்பாட்ட வீரர் என்ற பெருமையும் ஜான் டெர்ரிக்கு உண்டு.

செல்சி அணிக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதது குறித்து 35 வயது ஜான் டெர்ரி கூறுகையில், ''செல்சிக்காக தொடர்ந்து விளையாடுவதுதான் எனது விருப்பம். ஆனால் கிளப்பின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது. செல்சியில் இருந்து விலகினாலும், வேறு ஒரு பிரீமியர் லீக் அணிக்காக விளையாட எனக்கு விருப்பம் இல்லை'' என தெரிவித்துள்ளார்.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close