Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாஸ்டிக் பையால் பார்சிலோனா பறக்கும் சிறுவன்: லயனல் மெஸ்சியை சந்திக்கிறான்!

பிளாஸ்டிக் பையில் செய்யப்பட்ட மெஸ்சியின் ஜெர்சியை அணிந்து கால்பந்து விளையாடிய ஆப்கானிஸ்தான்  சிறுவனை பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல்  மெஸ்சியை  சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் மொர்டஷா அகமதி, தனது தந்தையிடம் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்சியின் ஜெர்சி வாங்கித் தருமாறு கேட்டு அடம் பிடித்தான். மெஸ்சியின் ஜெர்சியை வாங்கிக் கொடுக்க இயலாத அவனது தந்தை பிளாஸ்டிக் பையில் அர்ஜென்டினாவின் புளு மற்றும் வெள்ளை நிறத்தை வரைந்து அதில் மெஸ்சி 10 என வரைந்து கொடுத்து விட்டார். சிறுவன் அகமதி அந்த ஜெர்சியை அணிந்து கால்பந்து விளையாடுவது போன்ற படங்கள் மற்றும் செய்திகள் இணையங்களில் வைரல் ஆனது.

இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணி அந்த சிறுவனை பார்சிலோனாவுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது.  இது தொடர்பாக பார்சிலோனா அணி ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கத்துக்கு இமெயில் அனுப்பியுள்ளது.  லயனல் மெஸ்சியும் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கத்துக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.

 

                

பார்சிலோனாவில் உள்ள கேம்ப்நியூ மைதானத்துக்கு சிறுவன் அழைத்து செல்லப்படவுள்ளான். அங்கு சிறுவன் அகமதி, மெஸ்சியை சந்திப்பான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close