Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே ஓவர்... ஓஹோனு வாழ்க்கை : ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரர்!

ரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான ஏலத்தில்  யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில்,  நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார்.  முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில்,  கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச,  இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் வாஷ் செய்தது.  இந்த ஒரே ஓவரில் யுவராஜின் சரவெடி ஆட்டம் அவரை,  வரும் ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்திலும் 'மார்க்கி வீரர்' என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.

யுவராஜ்சிங்குடன் கெவின் பீட்டர்சன், ஷேன் வாட்சன், ஆரோன் ஃபின்ச், டேல் ஸ்டெயின், ட்வைன் ஸ்மித், மார்ட்டின் கப்தில், இஷாந்த் சர்மாவும் மார்க்கி வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பெங்களுருவில் வரும் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில், இவர்களை ஏலம் விட்ட பின்னரே மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள்.

இதில் யுவராஜ், கெவின் பீட்டர்சன் , வாட்சன், இஷாந்த் சர்மா ஆகியோரின் தொடக்க விலை ரூ. 2 கோடி ஆகும். இந்த ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில் 230 பேர் இந்திய வீரர்கள், 121 பேர் வெளிநாட்டினர்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close