Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''செருக்கு வேண்டாம், இதே ஆட்டம் தொடரட்டும் ''- வீரர்களுக்கு கேப்டன் தோனி அறிவுரை

ஸ்திரேலிய அணியை வொயிட் வாஷ் செய்து விட்டோமென்ற செருக்கு வேண்டாமென இந்திய வீரர்களுக்கு டிரெஸ்சிங் அறையில் கேப்டன் தோனி அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.  எனினும் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலிய அணியை டி20 தொடரில் துவம்சம் செய்தது. சொல்லப் போனால் எந்த அணியும் ஆஸ்திரேலிய அணியை இந்தளவுக்கு தோற்கடித்தது கிடையாது.ஆஸ்திரேலிய அணியை வொயிட் வாஷ் செய்த பிறகு, டிரெஸ்சிங் அறையில்,  இந்திய வீரர்களிடையே கேப்டன் தோனி சுமார் 20 நிமிடங்கள் பேசியுள்ளார்.

அதில், ''வொயிட் வாஷின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். அடுத்தடுத்த தொடர்களிலும் இது போன்ற நம்பிக்கை இருக்க வேண்டும். இதே ஆட்டத்தை அடுத்த தொடர்களிலும் நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் செருக்கு வேண்டாம் ''என கேப்டன் தோனி அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.

செய்தியாளர்களிடம் இந்த வெற்றி குறித்து தோனி கூறுகையில், '' டி20 தொடரை வென்றதில் பந்துவீச்சாளர்களுக்குதான் கணிசமான பங்கு இருக்கிறது. ஒரு நாள் தொடரில் பேட்ஸ்மேன்களின்  ஆட்டம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சு சோடை போயிருந்தது. ஐந்தாவது  ஒரு நாள் போட்டிக்கு பிறகு எல்லாமே மாறி விட்டது. டி 20 தொடரில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எல்லாமே சரியானதாக அமைந்தால் டி20 உலகக் கோப்பை போட்டிக்கும் இதுதான் சரியான அணியாக அமையும். ஆனாலும் இந்திய சூழலுக்கு தக்க சில மாற்றங்கள் அணியில் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது '' என்றார்

யுவராஜ் சிங்கை பற்றி தோனி குறிப்பிடுகையில், '' யுவராஜ் சிங் 5வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவது நல்ல பலனளிக்கும். ஏற்கனவே சுரேஷ் ரெய்னா இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால், இருவருக்குமிடையே சற்று இடைவெளி தேவைப்படுகிறது. இன்னும் அதிகமான போட்டிகளில் யுவராஜ்சிங் விளையாடுகையில்  அவருக்குள்ள  நெருக்கடி குறையும் வாய்ப்பிருக்கிறது என தெரிவித்தார்.

 சென்னை அணிக்காக 3வது பேட்ஸ்மேனாக சுரேஷ் ரெய்னா களமிறங்குவார். அதே வேளையில் தேசிய அணிக்காக 5,6வது பேட்ஸ்மேனாக இறங்கியும் கைகொடுக்கிறார் என சுரேஷ் ரெய்னாவுக்கு தோனி புகழாரம் சூட்டினார்.







 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close