Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராகுல் டிராவிட்டின் தயாரிப்பு : அடுத்த தோனி வங்கதேசத்தில் இருக்கிறார்!

ளையோர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம். அபாரமான விக்கெட் கீப்பிங் திறமை... என தோனியின் கலவையாகத் தெரிகிறார்  ரிசாப் பன்ட்.  அதிரடி வீரர் கில்கிரிஸ்ட்தான் நம்ம ரிசப்பிற்கும் ரோல் மாடல். அதிரடியிலும் அவரை போல்தான் என்பதை நேபாளத்திற்கு எதிராக பின்னி பிடலெடுத்தை பார்த்த போதே தெரிந்தது. நேபாளத்திற்கு எதிராக 24 பந்துகளில் 78 ரன்களை விளாசிய இந்த பன்ட் யார்? 

இளையோர் உலகக் கோப்பையின் விளையாடும் இந்திய அணியின் துணை கேப்டன்தான் இந்த பன்ட். இடது கை ஆட்டக்காரர். கூடவே விக்கெட் கீப்பர் என களத்தில் இரு கடினமான பணிகள்.  நமக்கு தோனியாக பன்ட் தெரிந்தாலும் அவருக்கு ஹீரோ கில்கிறிஸ்ட்தான். முதல் பந்தில் இருந்தே விளாசத் தொடங்கி விடுவார். ஸ்ட்ரெயிட் ட்ரைவில் சிக்சர் அடிப்பதில் பன்ட்டுக்கு அசாத்திய திறமை.

ஆனால் இவருக்கும் எளிதாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்து விடவில்லை.  ஹரித்துவாரில் பிறந்த பன்ட் கிரிக்கெட் விளையாடுவதற்காக  ராஜஸ்தானிற்கு இடம் பெயர்ந்தார்.  அங்கும் வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. பின்னர் டெல்லி நோக்கி பயணம். அங்குள்ள சானட் கிரிக்கெட் கிளப் பன்டின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு தீனி போட்டது. ஏராளமான சர்வதேச வீரர்களை உருவாக்கிய பிரபல பயிற்சியாளர் தராக் சின்ஹா, இவரை பட்டைத் தீட்டினார். இப்போது பன்ட் இருப்பது ராகுல் டிராவிட்டிடம். குருநாதர்கள் இப்படியிருக்கு பன்ட் எப்படி சோடை போவார். சான்ஸே இல்லையே...!

அதிரடி வீரராக வலம் வருவதை காட்டியிலும் சிறந்த விக்கெட் கீப்பர் என பெயர் வாங்குவதே ரிசப் பன்டின் குறிக்கோள். தனது இந்த ஆசை குறித்து மனம் திறக்கும் ரிசப்,  “ என்னை அதிரடி ஆட்டக்காரர் என்று பிறர் சொல்வதில் எனக்குப் எந்த  மகிழ்ச்சியும் இல்லை. அதிரடியாக விளையாடி எளிதில் விக்கெட்டை இழக்கும் ஆட்டத்தை நான் விளையாட விரும்பவில்லை. நேர்த்தியாகவும் நிதானமாகவும் விளையாடவே முயற்ச்சிக்கிறேன். விக்கெட் கீப்பிங் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறந்த விக்கெட் கீப்பர் என்ற பெயர் வாங்க வேண்டும் '' என்கிறார்.

தற்போது ரிசப்பிற்கு 18 வயதாகிறது. இந்திய தேசிய அணிக்குள் அவர் விரைவில் நுழைய வாய்ப்பிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் தோனியின் விக்கெட் கீப்பிங் இடத்தை விரித்திமான் சகா ஓரளவுக்கு நிரப்பியுள்ளார். ஆனால், பேட்டிங்கில் அவர் ஜொலிப்பதில்லை.  சிறந்த விக்கெட் கீப்பிங் பணிக்காகவே சிலர் அணியில் இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. விக்கெட்கீப்பர்கள் அதிரடி பேட்ஸ்மேன்களாக வலம் வரும் காலம் இது. தோனி, டி வில்லியர்ஸ் போன்றவர்கள் அதற்கு உதாரணம்.

தோனி போல அதிரடி பேட்ஸ்மேனாகவும் ரிசப் பன்ட் இருப்பதால், அடுத்த தோனியாகவே அவர் தெரிகிறார்.

- மு.பிரதீப் கிருஷ்ணா

மாணவர் பத்திரிகையாளர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ