Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக பெப் கார்டியாலோ

பேயர்ன், பார்சிலோனா அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.

இதுவரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மனுவேல் பெல்கிரினியின் ஒப்பந்தம் இந்த ஜுன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பணக்கார கால்பந்து அணிகளுல் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி, கார்டியாலா கைக்கு வருகிறது. இந்த அணிக்காக பெப் கார்டியாலா 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பார்சிலோன அணிக்காக பெப் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி   14 கோப்பைகளை வென்றது. இதில் 3 ஸ்பானீஷ் லீக் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளும் அடக்கம்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜெர்மன் ஜாம்பவான் பேயர்ன் மியூனிச்சுக்கு கார்டியாலா பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதற்கு முந்தைய சீசனில் சாம்பியன்ஸ் லீக், ஜெர்மன் கோப்பை, பண்டஸ்லீகா தொடரில் பேயர்ன் கோப்பையை கைப்பற்றியிருந்தது. ஆனால் பெப்பின் பயிற்சி நுணுக்கங்கள் பேயர்னுக்கு ஒத்துப் போகவில்லை.  இவரது பயிற்சி காலத்தில் தொடர்ந்து இரு முறை அந்த  அணி சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியது.

தொடர் தோல்விகளையடுத்து, பேயர்ன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பெப், தற்போது மான்செஸ்டர் சிட்டியில் இணைந்துள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close