Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்துக்கு ஓடியது ஏன்?: தென்ஆப்ரிக்காவில் பீட்டர்சனை போட்டுத் தள்ளிய இந்திய வம்சாவளி!

கெவின் பீட்டர்சன்... தந்தை நாடான தென்ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி, தாய் நாடான இங்கிலாந்து அணியில் ஏன் இணைந்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளும் விஷயம் இது. கெவினின் தந்தை தென்ஆப்ரிக்காக்காரர். தாய் இங்கிலாந்து நாட்டவர். அந்தவகையில் கெவினுக்கு இங்கிலாந்துடன் தொடர்பு இருந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டு வாக்கின் கெவின் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். சரி... இங்கிலாந்துதான் அவருக்கு பிடித்திருக்கிறது என பெற்றோர்கள் விட்டு விட்டனர். கொஞ்ச காலம் கவுண்டி  கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சனின் காலம் கழிந்தது. அடுத்த நான்கே ஆண்டுகளில் இங்கிலாந்து அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. கெவினின் ஆட்டத்திறமை பற்றிய சந்தேகம் யாருக்குமே இல்லை. எனவே அணியில் அவருக்கென்று நிரந்தர இடம் உருவானது.

கெவின் கிரிக்கெட்டில் கில்லிதான். ஆனால் வாயில கண்டம்னு சொல்லுவாங்களே அது அப்படியே கெவினுக்கு பொருந்தும். வெளிப்படையாகப் பேசி சர்ச்சைகளில் சிக்குவது கெவின் பீட்டர்சனுக்கு பொழுது போக்கு போன்றது.  இங்கிலாந்து கேப்டனையும் வம்பிழுக்கிழுப்பார். பயிற்சியாளரிடம் மல்லு கட்டுவார். அனைவரையுத் கரித்துக் கொட்டுவார்.
 

தென்னாப்பிரிக்கத் தொடரின் போது, பயிற்சியாளர் ஆன்டி பிளவர் மற்றும் கேப்டன் ஸ்டிராஸ் ஆகியோரை ஒரு முறை கெவின் தகாத வார்த்தைகளால் திட்டினார். சக வீரர்களிடமும் விடாமல் சண்டை.  இதன் காரணமாகத்தான் இங்கிலாந்து அணியில் இருந்தும்   கழற்றி விடப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டுடன் கெவினின் சர்வதேச கிரிக்கெடுக்கு முற்றுப்புள்ளி விழுந்து விட்டது.

ஆட்டக்காரனுக்கு எங்கு சென்றாலும் மதிப்புதானே. கெவினை டி20 அணிகள் அரவணைத்துக் கொண்டன. பிக் பேஷ் தொடரிலும் தற்போது அவர் அசத்தி வருகிறார். தனது சேக்காலியும் சோக்காலியுமான கிறிஸ் கெயிலுடன் பார்ட்டிகளிலும் கெவின் பங்கேற்று பொழுதை கழித்தார். ஆனால் தேசிய அணிக்கான அழைப்பு மட்டும் வரவே இல்லை.  

இந்நிலையில்தான் நான் ஏன் தென்ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறினேன் என்ற காரணத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கெவின்.  '' அந்த சமயத்தில் தென்ஆப்பிக்காவில்  'டால்பின்ஸ்' என்ற அணிக்காக கெவின் விளையாடியுள்ளார்.  ஒரு கட்டத்தில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, அவருக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்தது இந்திய வம்சாவளியைச் சார்ந்த குலாம் போடி.

தென்னாப்பிரிக்காவில் இனபாகுபாடு  எல்லா துறைகளிலும் இருந்தது. கிரிக்கெட்டிலும் கொஞ்சம் கூடுதலாகவே அது இருந்தது. விளையாட்டிலும் இதுவா என   வெறுத்த பீட்டர்சன், தனது கிரிக்கெட் வாழ்க்கை இங்கு சிறப்பாக அமையாது என கருதி தாய்நாடான இங்கிலாந்துக்கு நடையை கட்டி விட்டார்.  அங்கு நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக 4 வருடம் விளையாடிய பிறகு தேசிய அணியில் இருந்து அழைப்பு வந்தது.

தென்ஆப்ரிக்காவில் இருந்து கெவின் பீட்டர்சன் வெளியேற காரணமாக இருந்த குலாம் போடி அண்மையில் சூதாட்ட வழக்கில் சிக்கினார். இதனால்,  20 ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில்தான் பீட்டர்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் “16 ஆண்டுகளாக மக்களிடம் சொல்ல நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது. குலாம்  போடி உனக்கு முடிவு வந்துவிட்டது”என குறிப்பிட்டுள்ளார். 

கெவின்  பீட்டர்சன்  வாயைத் திறந்தால் மட்டுமல்ல ட்விட் செய்தாலும் சர்ச்சைதான்!


மு.பிரதீப் கிருஷ்ணா
மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ