Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விராட் கோலியின் கோபத்துக்கு பின்னால் சிம்மராசியா?

ளத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் தன்னுடைய குணம்,  தனது குடும்பத்திலிருந்தே தனக்கு வந்ததாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுடனான ஜாலி உரையாடலின் போது கோலி இவ்வாறு தெரிவித்தார். மேலும் சச்சினே தான் கிரிக்கெட் விளையாட வந்ததற்கு மிகப்பெரிய காரணம் என்றும் அவர் கூறினார்.


நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் பேட்டிகளிலும்,  போட்டிகளிலும் மோதிக்கொண்டாலும்,  கோலியும் மேக்ஸ்வெல்லும் சகஜமாகவும் ஜாலியாகவும் உரையாடிக்கொண்டனர்.

இந்திய அணியின் செயல்பாடு, கோலி – ஃபால்க்னர் உரையாடல், சச்சின், ஐ.பி.எல் என மேக்ஸ்வெல் கேட்ட கேள்விகளுக்கு கோலி பதிலளித்தார். களத்தில் தான் தைரியமாக தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதைப் பற்றிக் கேட்டதற்கு,  “அக்குணம் என் குடும்பத்திலேயே இருக்கிறது. என் தந்தை சிம்மராசிக்காரர். அவரும் அப்படித்தான். அதுமட்டுமின்றி டெல்லி கிரிக்கெட்டில் போராடித்தான் முன்னேற வேண்டும். அந்தப் போராட்ட குணமே இதற்குக் காரணம்” என்று கோலி கூறினார்.

ஜேம்ஸ் ஃபால்க்னருடன் தான் களத்தில் பேசியது பற்றிக் கேட்டதற்கு, “நாங்கள் வேடிக்கையாகத்தான் பேசிக்கொண்டோம். நாங்கள் பேசியபோது அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ பேசிக்கொள்ளவில்லை. அப்படி நடந்துகொள்ளும்போது நம் முழுத் திறனும் வெளிப்படும். கடைசிப் போட்டியில் நான் கீழே விழுந்தபோது ஃபால்க்னர் கை கொடுத்து என்னை தூக்கிவிட்டார். அவரும் ஜாலியாகத்தான் பேசுவார். இதை நாங்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று சகஜமாகக் கூறினார்.

சச்சினோடு விளையாடிய நாட்கள் தன்னால் மறக்க முடியாதவை என்றும், தன் வளர்ச்சிக்கு அவர் பெரும் பங்காற்றினார் என்றும் கோலி கூறினார். “என் ஆட்டத்தில் சிறு குறைகள் இருந்தாலும், சச்சின் தானாக வந்து என்னிடம் அதைப்பற்றிப் பேசுவார். அவ்வளவு பெரிய வீரர் ஒரு இளம் வீரரிடம் வந்து பேசவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் சச்சின் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரோடு விளையாடியது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” என்று நெகிழ்ந்தார் கோலி.

ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர்களின் அனுபவமின்மையும், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரின் அனுபவமின்மையுமே அணிகளின் தோல்விக்குக் காரணம் என்று கோலி கூறினார். ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் எதிரணி வீரர்களிடமும் நட்பு பாராட்ட முடிகிறது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

 
Kohli on banter and being competitive

Where does Virat Kohli's fiery approach come from? He explains to Glenn Maxwell.Watch the full interview HERE: http://cricketa.us/1Q8JQLH

Posted by cricket.com.au on 2 February 2016

இறுதியாக மேக்ஸ்வெல் கேட்ட ‘ரேபிட் - ஃபயர்’ கேள்விகளுக்கு கோலி கூலாக பதிலளித்தார். தனக்குப் பிடித்த பானங்களையும் பொழுதுபோக்குகளையும் கூறிய கோலி,  கிரிக்கெட் வீரர்களில் முரளியை விட வார்னேவும், லாராவை விட சச்சினுமே தனக்கு ஃபேவரிட் என்று கூறினார். பிக் பேஷ் அணிகளில் தான் விளையாடும் மெல்போர்ன் அணி பிடிக்குமா இல்லை தனது பெங்களூர் டீம்-மேட் ஸ்டார்க் விளையாடும் சிட்னி அணி பிடிக்குமா என்று மடக்கிய மேக்ஸ்வெல்லை, சிட்னி தான் பிடிக்கும் என்று சட்டென்று சொல்லி அதிர வைத்தார் கோலி.


இப்பேட்டியின் போது கோலி கூறிய ஒரு வாக்கியம் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது, “சிறு வயது முதலே எனக்குள் ஒரு எண்ணம் இருக்கும். சும்மா கிரிக்கெட் விளையாடிவிட்டு வர எனக்குப் பிடிக்காது. எதிரணியினர் என்னை வீழ்த்தப் போராடவேண்டும். என்னைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டும் என்று நான் எப்பொழுதும் நினைப்பேன்” என்றார். அந்தச் சிறுவயது எண்ணம்தான் இன்று கோலியை இந்த உயரத்தில் நிறுத்தியுள்ளதோ..?!

கோலி, மேக்ஸ்வெல் உரையாடலை முழுமையாகக் காண  https://www.youtube.com/watch?v=1V5iTZsRk-I

மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ