Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார் !

தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று குவாஹாத்தியில் தொடங்குகிறது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 1987ல் கொல்கத்தாவிலும், 1995ல் சென்னையிலும் தெற்காசிய போட்டிகள் நடைபெற்றுள்ளது.  வங்கதேச  தலைநகர்  டாக்காவில் கடந்த 2010ல் நடைபெற்ற  போட்டியில் இந்தியா 90 தங்க பதக்கங்கள் உள்பட  மொத்தம் 175 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்தது.

இந்த போட்டியை அசாம் மற்றும் மேகலாயா மாநிலங்கள் இணைந்து நடத்துகின்றன. குவாஹாத்தியில் தடகளம், கூடைப்பந்து, சைக்கிள் போட்டிகள், கால்பந்து, ஹேண்ட் பால், ஹாக்கி, கபடி, கோ-கோ, துப்பாக்கிச்சூடுதல், ஸ்குவாஸ், நீச்சல், டென்னிஸ், டிரையத்லான், கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம், ஆடவர் கால்பந்து ஆகிய விளையாட்டுகள் நடை பெறுகிறது. அதே வேளையில் ஷில்லாங்கில் வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஜூடோ, டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வூசு, பெண்கள் கால்பந்து ஆகிய விளையாட்டுகள் நடக்கவுள்ளன.

இந்த முறை 23 விளையாட்டுகளில் 228 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. மொத்தம் 228 தங்க பதக்கங்கள், 228 வெள்ளி பதக்கங்கள், 308 வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. ஆடவர் பிரிவில் நடத்தப்படும் அனைத்து விளையாட்டுகளும் மகளிர் பிரிவிலும் முதன் முறையாக நடத்தப்படவுள்ளது.

வரும் 16ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 521  வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.  12வது தெற்காசிய போட்டிகளை நடத்துவதற்காக அஸாம், மேகாலயா மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.150 கோடி நிதி  ஒதுக்கியிருந்தது. 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ