Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஐடியில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் : கிரிகெட் வீரர் அஸ்வின் தொடங்கி வைத்தார்!

வேலூர் மாவட்டம் விஐடி பல்கலைகழகத்தில4 நாட்கள் நடைபெறும் ரிவேரா (Riviera-2016) என்கிற சர்வதேச விளையாட்டு மற்றும் கலை விழா வண்ணமையமாக இன்று தொடங்கியது. விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் இந்திய கிரிகெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடங்கி வைத்தார்.

விஐடி பல்கலைகழகத்தில் ஆண்டுதோறும் ரிவேரா என்கிற சர்வதேச அளவிலான விளையாட்டு மற்றும் கலை விழா பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ரிவேரா திருவிழா  7 ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாடு முழுவதிலுமிருந்து 250 பல்கலைகழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் பங்கேற்றுள்ளனர்.


இந்திய திரை இசை பாடகர்கள் சுனிதா சௌகான் மற்றும் கார்த்தி ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் ஸ்பெல் பீ என்கிற பள்ளி மாணவமாணவியருக்கான ஆங்கில திறன் போட்டி இந்திய நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விஐடி மாணவ- மாணவியரின் 'ஐக்கியா ?என்ற கலை நிகழ்ச்சியும்  மேலும் கலை மற்றும் விளையாட்டு திறமைகளை வெளிபடுத்தும் வகையில் பாட்டுக்கு பாட்டு ,நடன்ம், நாட்டியம் ,இசை  ஆகியவற்றுடன் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் என 102 நிகழ்வுகளும் தடகளம் ,கைபந்து, கூடைபந்து ,செஸ் ,டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 16 வதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவியருக்கு ரூ.25 லட்சம் ரொக்க பரிசு ,பதக்கம் மற்றும்  கேடயம் பரிசாக வழங்கப்படுகின்றன.

          


நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசுகையில்,'' ஒவ்வொரு ஆண்டும் கடந்தாண்டை மிஞ்சும் வகையில் ரிவேரா நிகழ்ச்சியானது நடந்துவருவது சிறப்புக்குரியது. விஐடி பல்கலைகழகம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையில் மாணவர்களுக்கு விளையாட்டு உதவி தொகையுடன் ஊக்கமளித்து வருகிறது"என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய கிரிகெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிவேரா யொட்டி நடத்தப்பட்ட கிரிகெட் மற்றும் ஆக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் மாரத்தன் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கி பேசியதாவது' பொறியியல் கல்வி படிப்பதற்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு விஐடி சிறந்த நிறுவனமாக விளங்கிவருவது பாராட்டுக்குரியது. நீங்கள் இங்குள்ள வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் உங்களுக்கு நல்லஎதிர்காலம் உள்ளது. என்னுடைய நன்பர்கள் பலர் விஐடியில் படித்து பல்வேறு துறைகளில் சாதனை செய்து வருகின்றனர். இந்திய கிரிகெட் அணியில் இடம் பெற்றுள்ளதை நான் பெருமையாக கருதுகிறேன். வரும் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி ''என்றார்.

- ம.சுமன்.
மாணவர் பத்திரிகையாளர்
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ