Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போதும் நேசித்தோம் இப்போதும் நேசிக்கிறோம்... கண்ணீர் விடும் மான்செஸ்டர் யுனைடெட்!

டந்த 1958-ம் ஆண்டு இதே தினம். பெல்கிரேடில் நடந்த ஐரோப்பிய கோப்பை (தற்போது சாம்பியன்ஸ் லீக்) தொடரில் பங்கேற்ற  மான்செஸ்டர் யுனைடெட் அணி,  மீண்டும் தாயகம் புறப்பட்டது. பெல்கிரேடில்  இருந்து மான்செஸ்டருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஐரோப்பியன்  விமானத்தில்,  மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் , பத்திரிகையாளர்கள் உள்பட 44 பேர் இருந்தனர்.

மான்செஸ்டருக்கு புறப்பட்ட அந்த விமானம், அப்போது மேற்கு ஜெர்மனியில் இருந்த மியூனிச்சில் இறங்கி  பெட்ரோல் நிரப்பிக் கொண்டு மாலை 3 மணியளவில், மீண்டும் புறப்படத் தொடங்கியது. ரன்வேயில் பனி அதிகமாக இருந்தது. இரு முறை விமானம் மேலெழும்ப முயற்சித்தும் விமானத்தின் இடது பக்க என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக,  டேக் ஆஃப் ஆக முடியவில்லை.

மீண்டும் மூன்றாவது முறையாக விமானத்தை டேக் ஆஃப் செய்ய விமானிகள் முயல, அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ரன்வேயில் சறுக்கிக் கொண்டு சென்ற விமானம், எதிரே இருந்த விமான நிலைய சுவரில் போய் பலமாக மோதியது.மோதிய வேகத்தில் இரண்டு துண்டானது.

'மியூனிச் ஏர் டிசேஸ்டர்' என வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்த விபத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின்  புகழ்பெற்ற 8  கால்பந்து வீரர்கள் விமானத்திற்குள்ளேயே பலியானார்கள். அதுபோல் பத்திரிகையாளர்கள் 8 பேரும் பைலட்டுகள் உள்பட 21 பேர் மொத்தம் பலியானார்கள்

ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் மத் பஸ்பிதான் அப்போது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அவரும் இந்த விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்தான். அதனால் இந்த அணிக்கு 'மத் பஸ்பி பாய்ஸ்' என்ற செல்லப் பெயரும் உண்டு.

அந்த காலத்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்குதான் உலகமெங்கும் கால்பந்து ரசிகர்கள் அதிகம். இந்த விபத்தால் அந்த அணியின்  ரசிகர்கள் அழுது புலம்பினார்கள். கால்பந்து உலகின் 'கறுப்பு தினம் 'என்று இது அழைக்கப்பட்டது.

அந்த விபத்தில் பலியான தங்கள் கால்பந்து வீரர்களுக்கு,  மான்செஸ்டர் யுனைடெட்டின் தாயகமான ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நினைவு சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளர் லூயீஸ் வான் கால், தலைமையில் நேற்று  வீரர்கள், ரசிகர்கள் மியூனிச் விபத்தில் பலியான கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ