Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு !

ந்திய அணியின் கேப்டன் தோனி,  இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி யில் இந்திய அணியின் கேப்டன் தோனி,  மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இந்திய அணியின் மேலாளரும் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து சன்ஸ்டார் பத்திரிகைக்கு அளித்துள்ள வீடியோ பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில், இது 100 சதவீதம் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

" அந்த போட்டி தொடங்குவதற்கு முன், இரு நாட்கள் பெய்த மழை காரணமாக  மான்செஸ்டரின் ஓல்ட் ட்ராபோர்ட்  மைதானத்தின் பிட்ச் ஈரப்பதமாக இருந்தது. இது பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம். தோனியும் டிரெஸ்சிங் அறையில் டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்வதாக கூறியுள்ளார்.

ஆனால் டாஸ் வென்ற பிறகு அவர் பேட்டிங்கை தேர்வு செய்தது  சக வீரர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. இந்த சமயத்தில் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை முதலில்  தேர்வு செய்யாதது ஏன்?" என்று  அவர் அந்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போதைய பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீநிவாசனுக்கும் இது குறித்து  புகார் கடிதமும் அளித்தேன். ஆனால் அவரும் இந்த செய்தியை நம்புவதற்கு மறுத்தார். 'யாரும் இதனை நம்பவும் மாட்டார்கள்' என்று ஸ்ரீநிவாசன் என்னிடம் கூறினார்''  என சுனில் தேவ் தெரிவித்துள்ளார்.

மேட்ச் பிக்சிங் நடந்ததாக கூறப்படும் மான்செஸ்டர்  போட்டியில்,  இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த போட்டியில் தோனி முதல் இன்னிங்சில் 71 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 27 ரன்களையும் அடித்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருடன் விடை பெற்றார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ