Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.1600 கோடியை இழப்பை சந்திக்கும்: பி.சி.சி.ஐ பல்லை பிடுங்கியது லோதா கமிட்டி!

லோதா கமிட்டி பரிந்துரை அமல் செய்யப்பட்டால், இந்த ஆண்டு பி.சி.சி.ஐ ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பபான பி.சி.சி.ஐ. யின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும். இதில் பெரும் பகுதி தொலைகாட்சி உரிமத்ததால் கிடைப்பது. த கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சீர்கேடுகளை களைய  உச்சநீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி, கிரிக்கெட் அமைப்புகளை சீரமைக்க, பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது.

அதில் முக்கியமானது,  ஒவ்வொரு ஓவர் இடைவேளை, விக்கெட் அவுட் ஆகும் சமயங்களில் தொலைகாட்சி விளம்பரங்கள் ஒளிபரப்ப  அனுமதிக்க கூடாது என்பது. அத்துடன் லஞ்ச் பிரேக், டீ பிரேக் போன்றவற்றின் போது மட்டுமே விளம்பரங்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் லோதா கமிட்டி  ரிந்துரைத்துள்ளது. இதனால் பி.சி.சி.ஐ. யின் ஆண்டு வருமானம் ரூ. 2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 400 கோடியாக குறைந்து விடுமென்று கூறப்படுகிறது. இது பி.சி.சி.ஐ.யின் மொத்த வருமானத்தில் 80 சதவீதம் ஆகும்.

தற்போது பி.சி.சி.ஐ நடத்தும் போட்டிகளுக்கு உரிமம் எடுக்கும் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 43 கோடியை வழங்குகின்றன.  லோதா கமிட்டியின் பரிந்துரை அமலுக்கு வந்தால்,  தொலைகாட்சி நிறுவனங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 8 முதல் ரூ. 10 கோடி  வரை இழப்பை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.  1600 கோடிக்கு மேல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இழப்பை சந்திக்கும்.

அதே வேளையில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொலைக்காட்சி உரிமங்களால் அதிக லாபத்தை ஈட்டும். அந்த வகையில் கிரிக்கெட் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்ற அந்தஸ்த்தையும் பி.சி.சி.ஐ இழக்கப் போகிறது. மேலும் ஐ.சி.சி.க்கும் அதிக பணம் செலுத்தும் அமைப்பு என்ற வகையில் அங்கும் தனது செல்வாக்கை பி.சி.சி.ஐ இழக்கும்.

பி.சி.சி.ஐ ஆண்டுக்கு தனது உறுப்பினர்களுக்கு அதாவது ஒவ்வாரு  மாநில கிரிக்கெட் போர்டுக்கு ஆண்டுக்கு ரூ. 750 கோடி செலவழிக்கிறது. 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து சீனியர் அணி வரை இந்த தொகை பாய்கிறது. பி.சி.சி.ஐ ஆண்டுக்கு  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் போட்டிகளை 16,19,22 என பல வயதுகளிலும்  ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே என மாநில அணிகளுக்குமிடையே போட்டிகளை நடத்துகிறது.  இதற்காக ஆண்டுக்கு ரூ.  350 கோடியை பி.சி.சி.ஐ செலவழிக்கிறது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு மாத பென்சன் தொகையாக ஆண்டுக்கு ரூ. 25 கோடி வழங்குகிறது.

இதற்கு ஐ.பி.எல். தொடரில் வரும் வருமானமும், தொலைகாட்சி உரிமத்தில் இருந்து கிடைக்கும் பெரும் தொகையும்தான் பி.சி.சி.ஐ பக்கபலமாக இருந்தது. தற்போது லோதா கமிட்டி பரிந்துரை அமலுக்கு வந்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் பி.சி.சி.ஐ கையை பிசைந்து கொண்டிருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ