Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேட்ச் பிக்சிங் : ரூ. 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு!

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட சன் ஸ்டார் ஹிந்தி பத்திரிகை மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக ,  இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

ஹிந்தி பத்திரிகையான 'சன் ஸ்டார்' அண்மையில்,  இந்திய அணியின் முன்னாள் மேலாளரும் டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் , கடந்த 2014-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து தோனி அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '' இந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை. என்னை அவமதிக்கும் வகையிலும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மறுப்பு செய்தி வெளியிடவில்லையென்றால் ரூ. 100 கோடி  இழப்பீடு கேட்டு மானநஷ்ட  வழக்கு தொடருவேன் ''என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close