Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரிக்கெட் வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ' 0 ' குவித்து உலக சாதனை!

ங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நடத்தும் கவுண்டி கிரிக்கெட் உள்ளரங்க போட்டி நடைபெற்று வருகிறது. கான்டெர்பெரி நகரில் நடந்த ஆட்டத்தில்,  பாப்சைல்ட் அணியுடன் கிறிஸ்ட் சர்ச் அணி மோதியது. முதலில் விளையாடிய கிறிஸ்ட் சர்ச் அணி,  120 ரன்கள் அடித்தது. ஆனால் அடுத்து பேட்டிங்கை தொடங்கிய பாப்சைல்ட் அணி வீரர்களால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.

இந்த போட்டியில் பாப் சைல்ட் அணி ஒரு ரன் கூட  எடுக்க முடியாமல்  ஆல்அவுட்டாகி,  மிகப் பெரிய கேலிக் கூத்தான தோல்வியை சந்தித்தது. வெறும் 20 பந்துகளை மட்டும்தான் அந்த அணி வீரர்கள் சந்தித்தனர். இதில் 6 பேர் கிளீன் போல்டானார்கள். 3 வீரர்கள்  ரன்அவுட்டானார்கள். ஒருவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் உள்ளரங்க போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஒரு அணி ஆல்அவுட் ஆவது இது 2வது முறை. இதற்கு முன் கடந்த 1913-ம் ஆண்டு இதே போன்று சோமர்செட் அணியும் இதே போன்று ஒரு ரன் கூட எடுக்காமல் ஆல்அவுட்டாகியுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close