Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெறி மாஸ் காட்டிய இந்தியா... இலங்கை அணி படுதோல்வி!

ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகளுக்கான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை, பந்துவீச்சை தேர்வு செய்தது. தவான் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் குவித்து கெத்து காட்டிய இந்தியா அபாரமாக ஆடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் தவான் 51 ரன்களும், ரோஹித் ஷர்மா 43 ரன்களும் குவித்தனர். ஹர்த்திக் பாண்ட்யா, ரெய்னா, யுவராஜ் ஆகியோரை வீழ்த்தி இலங்கையின் பெரேரா ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ