Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிக்கெட் விற்பனையில் முறைகேடு: பிஃபா முன்னாள் பொதுச்செயலாளருக்கு 12 ஆண்டுகள் தடை!

லகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில்,  முறைகேட்டில் ஈடுபட்டதாக பிஃபா முன்னாள்  பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கிக்கு 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவில் பெரும் ஊழல் நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஜோசப் பிளேட்டர் பதவி விலக நேரிட்டது.

அத்துடன் பொதுச் செயலளாளராக இருந்த ஜெரோம் வால்கி மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.  உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்புவது குறித்த மீடியா உரிமையை வழங்குவதிலும் மற்றும் டிக்கெட் விற்பனையிலும் ஜெரோம் வால்கி,   முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து பிஃபா எதிக்ஸ் கமிட்டி விசாரணை செய்து வந்தது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜெரோம் வால்கிக்கு கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ