Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் 83 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா. 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 83 ரன்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 46 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். ரஹானே 22 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்
 

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற, தொடர் சமனில் உள்ளது. எனவே இந்த போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் களம் இறங்குகின்றன. இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.



முதல் ஓவரை அஸ்வினை கொண்டு ஆரம்பித்த தோனிக்கு மூன்றவது பந்திலும்,  கடைசி பந்திலும் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். தோணி கடைசி இரண்டு போட்டிகளிலும் அஸ்வினை முதல் ஓவர் வீச வைப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியை அஷ்வின் தன் சுழலால் துவம்சம் செய்தார். டாப் ஆர்டரை பவர்ப்ளேவுக்குள் காலி செய்த அவர் மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாத அந்த அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது இலங்கை அணியின் மிகக் குறைந்த ஸ்கோராகும். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ