Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெனால்டியை பாஸ் செய்த மெஸ்ஸி: சக வீரருக்கு உதவிய பெருந்தன்மை!

தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், பந்தை கோல் நோக்கி அடிக்காமல், சுவாரஸ் கோல் அடிப்பதற்காக பாஸ் செய்து அப்ளாஸ் அள்ளியுள்ளார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. தனது 300-வது கோலைப் பொருட்படுத்தாமல், சுவாரசின் சாதனைக்கு உதவிய அவரது இந்தப் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

நேற்று நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி,  செல்டா டி விகோ அணிக்கெதிராக விளையாடியது. முதல் பாதியில் மெஸ்ஸியும், செல்டா அணியின் குடேட்டியும் கோல் அடிக்க,  ஆட்டம்  1-1 என சமநிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய சுவாரஸ்,  59 வது மற்றும் 75 வது நிமிடங்களில் கோலடித்தார். இந்நிலையில்தான் அந்த அபூர்வ நிகழ்வு அரங்கேறியது.


ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மெஸ்ஸியை,  எதிரணியின் கேஸ்ட்ரோ கோல்போஸ்ட் அருகே தள்ளிவிட,  பார்சிலோனா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எந்த கால்பந்து அணிக்குமே ‘பெனால்டி ஸ்பெஷலிஸ்ட்’ என்று ஒருவர் இருப்பர். அவர்கள்தான் எப்போதுமே பெனால்டியை அடிப்பர். பார்சிலோனாவின் பெனால்டி ஸ்பெஷலிஸ்டான மெஸ்ஸியும் பெனால்டியை கோலாக மாற்றச் சென்றார். பந்து வலையத்துக்குள் புகுந்தால், அது மெஸ்ஸியின் 300வது லா லிகா கோலாக அமையும். இப்படி ஒரு மைல் கல்லைப் படைப்பார் என்று நினைக்கையில், அவரோ பந்தை,  ஓடிவந்து கொண்டிருந்த சுவாரசிற்குத் தட்டிவிட, அதை எளிதில் கோலாக்கி ஹாட்-ட்ரிக்கை நிறைவு செய்தார் சுவார்ஸ்.

300 வது கோலை எப்பொழுது வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால் ஹாட்-டிரிக்கை இந்தப் போட்டியில் தான் அடிக்க முடியும் என்பதால், சுவாரஸ்சிற்கு உதவ மெஸ்ஸி இப்படி பெருந்தன்மையோடு செயல்பட்டுள்ளார். மெஸ்ஸியின் இந்தச் செயல்பாட்டை சக வீர வீரர்கள் மட்டுமின்றி, உலகின் அனைத்து கால்பந்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இப்போட்டியில் பார்சிலோனா அணி 6-1 என்ற கோல்கணக்கில் வென்றது. அவ்வணியின் ரகிடிக் மற்றும் நெய்மார் ஆகியோரும் கோலடித்தனர். 24 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்,  லா லிகா தொடரில் பார்சிலோனா அணி 57 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. அத்லெடிகோ மாட்ரிட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

“இப்படி சுயநலமின்றி இருப்பதால் தான் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த வீரர்” என்று உச்சிமுகர்கின்றனர் ரசிகர்கள்.  அமேசிங் ப்ரோ. ஹேட்ஸ் ஆஃப் டு யூ.

மெஸ்ஸியின் அபூர்வச் செயலைக்காண க்ளிக் செய்க... 

 

 

மு.பிரதீப் கிருஷ்ணா
மாணவர் பத்திரிகையாளர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close