Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒரு மனிதனாக சென்னையுடன் தனி பந்தம் இருக்கிறது' - தோனி உருக்கம்!

சென்னையை விட்டு பிரிந்து சென்று விட்டேன் என்று சொன்னால் அது உண்மையாக இருக்காது என்று புனே அணியின் தற்போதைய கேப்டன் தோனி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள புனே அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி பேசுகையில், ''கடந்த 8 ஆண்டுகளாக சென்னை அணியுடன் எனக்கு தொடர்பு உள்ளது. ஒரு மனிதனாக அவ்வளவு நெருக்கம் அந்த ஊருடன் எனக்குள்ளது. ஒரு ஒற்றுமைமிக்க அணியான சென்னையை உருவாக்கினோம். இப்போது பிரிந்துள்ளோம்.

கடந்த 8 ஆண்டுகளாக அந்த அணியுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிவிட்டு,  மற்றொரு அணிக்கு ஆடுவது வித்தியாசமான அனுபவம்தான். உடனடியாக புதிய அணிக்கு விளையாடுவது எனக்கு பெரும் உற்சாகமூட்டுகிறது என்று நான் கூறினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதும், எங்கள் மீது அன்பையும், பாசத்தையும் காட்டிய சென்னை ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் விட்டது போலாகி விடும். அப்படி ஒரு வார்த்தை கூறப்பட்டால், அது நிச்சயம் தவறு. ஆனால் ஒரு முழுநேர தொழில்நுட்ப வீரராக என்னை சேர்த்துக் கொண்ட புனே அணிக்கு 100 சதவீத பங்களிப்பை நிச்சயம் நான் வழங்குவேன்.

இப்போது நிறைய வீரர்களை இழந்துள்ளேன். ஏலத்தில் சில முன்னாள் சென்னை அணி  வீரர்களையும் ஏலம் எடுத்துள்ளோம். 2 புதிய உரிமையாளர்கள் நிறைய வீர்ர்களை வாங்க வேண்டியிருந்தது. மற்ற 6 அணி உரிமையாளர்களும் ஒருவிதத்தில் செட்டில் ஆகிவிட்டனர். 

கிரிக்கெட்டை பொறுத்த வரையில் கெவின் பீட்டர்சன் ஒரு அற்புதமான வீரர். சிலர்  தங்கள் கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவார்கள். நடந்து கொள்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இதுவெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை'' என்றார்.


 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ