Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரி ஏய்ப்பு: பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் ரூ. 340 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

ரி ஏய்ப்பு விவகாரத்தில்,  பிரேசில் கால்பந்து வீரர்  நெய்மரின் ரூ.340 கோடி (50 மில்லியன் டாலர்கள் ) மதிப்புடைய சொத்துக்களை பிரேசில் நீதிமன்றம் முடக்கியுள்ளது.

கடந்த  2011 முதல் 2013-ம் ஆண்டு வரை நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திய வர்த்தக நிறுவனங்களில் 63 மில்லியன் ரியால்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிரேசில் நீதிமன்றம்,  நெய்மரின் சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உத்தரவிட்டுள்ளது. இதில் அவருக்கு சொந்தமான விமானமும் அடங்கும்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி மேட்ரிட் கோர்ட்டில்,  நெய்மர் பார்சிலோனா அணிக்கு மாறியதற்கு கைமாறிய தொகை குறித்து நெய்மர் மற்றும் அவரது தந்தை ஆகியோரிடம் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இங்கே பிரச்னை என்னவென்றால், பார்சிலோனா அணி நெய்மரை வாங்க 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருந்தது.

ஆனால் நெய்மர் கணக்கு காட்டியதோ 74 மில்லியன் டாலர்கள்தான். இதில் ஏற்கனவே அவர் விளையாடி வந்த பிரேசில் நாட்டை நேர்ந்த சான்டோஸ் அணிக்கு 18.5 மில்லியன் டாலர்களை பார்சிலோனா வழங்கியது. மீதி 55.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்,  நெய்மர் தந்தை நடத்தி வரும் நிறுவனத்துக்கு சென்றது. விசாரணையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் நெய்மர் வரி பாக்கியை செலுத்தி விட்டால், சிறை செல்ல வேண்டிய அவசியமிருக்காது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ