Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகக் கோப்பையை வெல்லும் அசாத்திய திறமை கொண்டது இந்திய அணி- தோனி

சிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி,  கோப்பையை வெல்லும் திறன் கொண்டது என இந்திய அணியின் கேப்டன் தோனி,  ஆசிய கோப்பைக்காக வங்கதேசம் புறப்படும் முன் தெரிவித்தார்.

முதன்முதலாக ஆசிய கோப்பை தொடரானது , இருபது ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 24 முதல் மார்ச் 6-ம் தேதி வரை  நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணியானது நேற்று  வங்கதேசம் புறப்பட்டது. புறப்படும் முன்  ஆசிய மற்றும் உலக கோப்பை போட்டிகள்  குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்  கேப்டன் தோனி.

அப்போது பேசுகையில் , "தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள  அணி நிச்சயம் அடுத்து வரும் பெரிய  தொடர்களை வெல்லும் திறன்  கொண்டதாகும். இதில் முக்கியமானது அனைவருக்கும் கிடைக்கப்படும் வாய்ப்புகளை  உறுதி செய்வது  மற்றும் காயங்கள்  தவிர்த்து முழு உடல்நலத்துடன்  இருப்பதே ஆகும்." என்றார்.



 உலக கோப்பை தொடர் குறித்து மேலும் கூறுகையில், "உலக கோப்பை போட்டிகள்  தொடங்குவதற்கு முன்பாக ஆசிய கோப்பை மற்றும் இரண்டு பயிற்சி போட்டிகள் உள்ளது. உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு முன்னால்  அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளிப்பதும் அவசியமாகும். " என்றார்.

முகமது சமி அணியில் இடம் பிடிப்பாரா?

உலக கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ள சமி  காயத்தில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், "உலக கோப்பை தொடருக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பதினைந்து பேர் கொண்ட அணியை அறிவித்து .விட வேண்டும். சமி  மாதிரியான வீரர்கள் குறுகிய காலத்திலே காயங்களில் இருந்து மீண்டு வரும் திறன் கொண்டவர்கள். அதனால் தான் அவர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அணிக்கு திரும்பினால் அணியில் பந்து வீச்சு மேலும் பலம் பெறும். கடைசி நேரங்களில் அவர் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்." என்றார்.

மேலும் பேசுகையில், "தேவை ஏற்பட்டால்தான் முன்னதாக களம் இறங்க வாய்ப்புள்ளது. உதாரணமாக பதினெட்டாவது ஓவர் வரை அணி நல்ல நிலையில் இருக்கும் போது  நான் முன்னரே களம் இறங்கி அணியின் ரன் விகிதத்தை மேலும் உயர்த்த முயற்சி செய்யலாம் ",என்றார். அணியை வழிநடத்துவதில் தான் எந்த மாற்றமும் இதுவரை செய்ததில்லை எனவும் வரும் தொடர்களிலும் மாற்றம் இருக்காது எனவும் கூறினார்


பிரேம் குமார் எஸ்.கே.

(மாணவ பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ