Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு நாள் போட்டியில் முச்சதம் அடித்து அசத்திய மாணவர்!

மும்பையில் நடைபெற்ற ஒரு லீக் கிரிக்கெட் போட்டியில் , பிஒய்சி ஹிந்து ஜிம்ஹானா அணிக்காக ஆடிய மகாராஷ்ட்ரா வீரர் பிரிதம் பாட்டீல்,  306 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை  புரிந்துள்ளார்.

பாட்டீலின் முச்சதத்தின் உதவியோடு அந்த அணி 594 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டியில் புதிய உச்சத்தை தொட்டது. சில மாதங்களுக்கு முன்னால்தான் இதே மகாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த பிரணவ் என்ற மாணவன்,  ஒரு இன்னிங்சில் 1000 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

தற்போது ஒரு நாள் தொடரிலும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த பாட்டீல் புதிய  உலக சாதனை புரிந்துள்ளார்.  ஒரு நாள் போட்டியில் முதலாவது முச்சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த 306 ரன்களை குவிக்க அவர் எடுத்து கொண்ட பந்துகள் வெறும் 134.  இந்த போட்டியில் அவர் மொத்தமாக 28 பவுண்டரிகளும் 26 சிக்ஸர்களும் விளாசி தள்ளினார்.


சர்வதேச ஒரு நாள் போட்டியில்,  இதுவரை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா அடித்த 264 ரன்களே அதிகம் ஆகும். ரோஹித் ஷர்மாவும் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது ஆகும்.

முச்சத நாயகனுக்கு 25,000 ருபாய் மதிப்பிலான பேட் பரிசு:

பாட்டீல் இரட்டை சத்தத்தை அடித்தபோது அவரின் சக வீரரான கேதர் ஜாதவ், அவர் முச்சதம் அடித்தால்  அவருக்கு புது பேட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதன்படி போட்டி முடிந்ததும் பாட்டீலுக்கு சுமார் 25, 000 ரூபாய் மதிப்பிலான எஸ்.எஸ் பேட் ஒன்றினை பரிசாக அளித்தார்.

பாட்டீலின் இந்த ஆட்டம் குறித்து கருது தெரிவித்த ஜாதவ், “அவர் சாதாரணமாக 70, 80  ரன்கள் எடுப்பார். நேற்று அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவருக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் அவர் தகுதியான ஆட்டக்காரர்”  என்றார்.”

594 என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய எதிரணி,  18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 86 ரன்களில் சுருண்டது. இதன் மூலமாக 508 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்தது அந்த அணி. ஒரு நாள் போட்டியில் ஒரு அணி,  இத்தனை பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதன் முறையாகும்.

-எஸ்.கே பிரேம் குமார்
(மாணவ பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ