Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாம்பியன்ஸ் லீக் : பார்சிலோனாவிடம் ஆர்சனல் தோல்வி!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கின. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி ஆர்சனல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 71வது நிமிடத்தில் மெஸ்சி பார்சிலோனாவுக்கான முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றினார். இறுதியில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது லெக் ஆட்டத்தில் ஒரு கோல் வாங்கி தோற்றாலும் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முன்னேறி விடும்.

இத்தாலியின் டூரின் நகரில் மற்றொரு ஆட்டத்தில் யுவான்டஸ் அணி பலம் வாய்ந்த பேயன்ன் மியூனிச் அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் தாமஸ் முல்லரும் ராபனும் பேயர்னுக்கான கோல்களை அடித்தனர்.

பிற்பாதியில் வீறுகொண்டு எழுந்த ஜுவான்டஸ் அணி,  63 மற்றும் 76வது நிமிடங்களில் தொடர்ச்சியாக இரு கோல்களை அடித்து அசத்தியது. டிபாலா மற்றும் ஸ்டுவாரா யுவான்டசுக்கான கோல்களை அடித்தனர். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. எனினும் 'அவே கோல் ' அடிப்படையில் பேயர்னுக்கு காலிறுதி வாய்ப்பு அதிகம்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ