Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெஸ்டில் மின்னல் வேக சதத்துடன் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மெக்கல்லம் !

ரு சதம் அடித்தால் 9 போட்டியில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு மத்தியில், மெக்கல்லம் போன்ற கிரிக்கெட்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏற்கனவே ஓய்வு அறிவித்து விட்ட மெக்கல்லம், தான் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியில்  முதல் இன்னிங்சில் மெக்கல்லம் 54 பந்துகளில் சதமடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் மெக்கல்லம் படைத்தார். முதல் இன்னிங்சில் 124 பந்துகளில் அவர் 145 ரன்களையும் குவித்தார்.

உலகிலேயே இத்தகயை அரிய சாதனையுடன் விடை  பெறும் ஒரே கிரிக்கெட்டர் மெக்கல்லமாகத்தான் இருக்கும் . அத்துடன் இந்த இன்னிங்சில் மெக்கல்லம் 6 சிக்சர்களை விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மொத்தம் 106 சிக்சர்களை அடித்தவர் என்ற பெருமையும் மெக்கல்லமுக்கு கிடைத்தது. இரண்டாவது இன்னிங்சிங்கிலும் மெக்கல்லம் 25 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார். மெக்கல்லம் விக்கெட்டை பறிகொடுத்ததும் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மெக்கல்லம் சிறப்பாக விளையாடினாலும் இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதோடு தொடரையும் நியூசிலாந்து இழந்தது. இந்த போட்டி முடிந்ததும் மெக்கல்லம் நியூசிலாந்து ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.

மைதானத்தில் அவர் ஆற்றிய உரை இங்கே...

''எனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையை 2 நிமிடங்களில் முடித்துக்கொள்கிறேன்.  ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்மித் போன்ற நல்ல தலைமை ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது.

கடந்த சில வருடங்களாக நியூசிலாந்து அணி நிறைய சாதித்துள்ளது.  சில போட்டிகளில் தோற்றாலும் வெற்றி முனைப்புடன்தான் ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடுகிறோம்.  நியூசிலாந்து அணிக்காக விளையாடிய காலக்கட்டங்கள் மறக்க முடியாதவை. 
 

குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் ஒரு கிரிக்கெட் வீரரால் தொடர்ந்து இயங்கமுடியாது. அவர்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி. இளைஞனாக அணிக்குள் நுழைந்தேன். ஒரு அருமையான மனைவி, அன்பான 3 குழந்தைகள் என இப்போது கிரிக்கெட்டை விட்டு விலகுகிறேன். இனி குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கப் போகிறேன். நியூசிலாந்து அணி மீது நம்பிக்கை வைக்கலாம். அனைவரும் அருமையான வீரர்கள். ஆஸ்திரேலிய அணிக்கும் எனது வாழ்த்துகள்'' என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ