Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையில் தொடங்கியது வேளாண் பல்கலைக்கழகங்களுக்கான போட்டிகள்!

16-வது அகில இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள், இந்த முறை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.

கடந்த திங்கள் 22-2-2016 அன்று சென்னை வருமானவரித் துறை தலைமை ஆணையர் கே.ராமலிங்கம்  தேசியக் கொடியை ஏற்றி வைக்க, இந்திய வேளாண் ஆராய்ச்சி கொடியை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எஸ்.திலகர் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கொடியை சென்னை காவல்துறை பொது ஆய்வாளர் முனைவர் எம்.ரவி  ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பல பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் கோவையில் குவிந்துள்ளனர்,மொத்தம் 56 அணிகள் தங்களது அணிவகுப்பு மரியாதையை செய்ய,அதனை சிறப்பு விருந்தினர் முனைவர்  எம்.ரவி,இ.கா.ப  ஏற்றுக்கொண்டார். பின்பு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  கு.ராமசாமி  ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்க,  அதனை  பல்கலைக்கழக வீரர்களும் வீராங்கனைகளும் தொடர் ஓட்டமாகக் கொண்டு சென்று விளையாட்டின் ஒருமைப் பாட்டினை வலியுறுத்தினர்.

பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனையடுத்து கே.ராமலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார். பின்னர் அமைதியின் அடையாளமாக வெள்ளைப் புறாக்களையும் ஹீலியம் பலூன்களையும் பறக்கவிட்டனர்.


அதனையடுத்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) முனைவர். ச.மகிமைராஜா  வரவேற்புறை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கோவை மாவட்ட தலைமை தபால் நிலைய மூத்த கண்காணிப்பாளர் அலெக்ஸ் ஜார்ஜ், தபால் தலையை  வெளியிட்டார். பின் பரதநாட்டியம் மற்றும் டேக்வாண்டோ மாணவர்கள் குழுமத்தின் கலை நிகழ்ச்சியோடு விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.


2001-ம் ஆண்டிலிருந்து இந்த போட்டிகளை இந்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து வருடாவருடம் நடத்தி வருகின்றனர் .போன முறை பதினைந்தாவது அகில இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இந்த போட்டி,  அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் 46 பல்கலைக் கழகங்கள் பங்குபெற்றன.  ஐந்து நாட்கள் வரை நடக்கும் இந்த அகில இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகள மற்றும் விளையாட்டு போட்டி,  வரும் வெள்ளிக் கிழமை வரை நடைபெற உள்ளது.

பல உற்சாகங்களும் பல கொண்டாட்டங்களும் விறுவிறுப்புகளும் நிறைந்ததாக போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. விளையாட்டு ரசிகர்கள் கட்டாயம் கண்டுகளிக்க வேண்டிய நிகழ்வாக இது இருக்கிறது. ஏராளமான பார்வையாளர்கள் பல்கலைக்கழக மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

தொகுப்பு: சா.கவியரசன்
(மாணவர் பத்திரிகையாளர்)
படங்கள்: ஜீ.கே.தினேஷ்

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close