Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'போர்ப்ஸ்' மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி, சானியா மிர்ஷா!

சியாவின் மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். சானியா மிர்ஷா, சாய்னா நேவால் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

வணிக பத்திரிக்கையான 'போர்ப்ஸ்'  ஆசிய கண்டத்தில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், ஹாங்காங் ஆய்வு நடத்தி நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என 300 பேர் பட்டியலை தயாரித்தது.

இந்த  பட்டியலில் 56 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.  விளையாட்டு வீரர்கள் பிரிவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்  விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார். இவவர் 2015-ம் ஆண்டு 11.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை  சம்பாதித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். டென்னிஸ் உலகில் வெற்றிகரமாக வலம் வரும் இளம் மங்கை என்று சானியாவுக்கு போர்ப்ஸ் புகழாரம் சூட்டியுள்ளது.

பேட்மிண்டன் வீராங்ககை சாய்னா பற்றி போர்ப்ஸ் குறிப்பிடுகையில், ' இந்த பேட்மிண்டன் ராணி இளைஞர்களின் ரோல் மாடல்' என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ