Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மல்யுத்த வீரர் காளிக்கு தலையில் பலத்த காயம்! (போட்டி வீடியோ)

இந்திய முன்னாள் மல்யுத்த வீரர் 44 வயதான தலிப் சிங் ராணா. காட்சி போட்டியின் போது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

'தி கிரேட் காளி' என்று அழைக்க்கப்படும் செல்லப்பெயருடன் வலம் வரும் இவர்,  உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானியில் நேற்று முன்தினம் இரவு டபிள்யூ.டபிள்யூ.இ என்று அழைக்கப்படும் பொழுதுபோக்குக்கான மல்யுத்த போட்டியை நடத்தினார்.

களத்தில் அவருடன் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களுடன் மோதினார். போட்டியின் ஒரு பகுதியாக அவரை சேர்களை கொண்டு தாக்கிய போது எதிர்பாராத விதமாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அந்த போட்டி காட்சி வீடியோ...

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ