Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனியை கரூரிலும் கோலியை தஞ்சாவூரிலும் ஏன் தேடுகிறார்கள்? - இது என்னடா புது டிஸைன்!

சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் விஷயங்களை கணிப்பது கடினம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு அந்த பிரச்னை இல்லை. அது ஆல்டைம் ட்ரெண்டில் இடம் பெறும் விஷயம்தான். ஆனால் நேற்று முதல் இந்தப் போட்டி பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல பரவிவருகிறது.

இதுவரை ஐசிசி ஆட்டங்களில் பாகிஸ்தான்,  இந்தியாவை வென்றதில்லை என்ற புள்ளிவிவரம் துவங்கி, தோனிக்கு அடிபட்டுள்ளது வரை டாப் ட்ரெண்டில் உள்ளது இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை ஆட்டம்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கூகுள் ட்ரெண்டில் உள்ள இந்திய வீரர்களில் தோனிக்குதான் முதலிடம், அடுத்து கோலி, யுவராஜ், ரோஹித், அஸ்வின் உள்ளனர்.  இவையெல்லாம் தமிழக புள்ளி விவரங்கள்தான். இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் தோனியை பற்றி கரூரில் உள்ளவர்கள்தான் அதிகம் தேடுகிறார்களாம்.

கோலியை பற்றி தஞ்சாவூர்க்காரர்கள் அதிகம் தேடுகிறார்களாம். யுவராஜை சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ளவர்களும், அஸ்வினை அவரது சொந்த ஊரான சென்னையில்தான் அதிகம் தேடுகிறார்களாம். குபீரென அந்தந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டை ஏன் அதிகரிக்கிறது என்பது... கூகுளாண்டவருக்கே வெளிச்சம்!

இந்தியா - பாகிஸ்தான் போட்டி போர் என்றால் கோலி, அப்ரிடிக்கும் இடையேதான் முக்கியமான யுத்தம் அவர்களுக்கும் என்ன போட்டி என்பதையும் கூகுள் தேடி சொல்கிறது. இன்னொரு பக்கம் இப்போதே பாகிஸ்தான் அணிக்கும், இந்திய அணிக்கும் மீம்ஸ்கள் தயாராகி வருகின்றன. மோக்கா...மோக்கா...


ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ