Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் வதம் : 'தளபதி' தொடங்க 'தல' முடித்தார் !

சியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

டாஸ் வென்ற இந்தியா,  பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதல் போட்டியில் இந்தியாவில் இடம் பிடித்த துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியில்,  தடை காரணமாக அணியில் இருந்து விலகி இருந்த அமீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  திணறிய  பாகிஸ்தான் அணி, 17.3  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் நெஹ்ரா, பூமராஹ், யுவராஜ்  தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர். பாகிஸ்தான் தரப்பில் சர்ஃபராஸ் மட்டுமே 25 ரன் குவித்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இந்திய அணி பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மாவும் ரஹானேவும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் விராட் கோலியும் யுவராஜ் சிங்கும் இணைந்து இந்திய அணியை தோல்வி பாதையில் இருந்து மீட்டெடுத்தனர்.

விராட் கோலி அபாரமாக விளையாடி 51 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். இதில் 7 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்த பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த தோனி 3 பந்துகளில் 7 ரன்களை எடுக்க, இந்திய அணி 15.3 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.யுவராஜ்சிங், தன் பங்குக்கு  14 ரன்களை எடுத்தார்.ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ