Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிவர்பூலை வீழ்த்தி கர்லிங் கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி!

ர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி,  டைபிரேக்கரில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.  பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆர்சனல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடந்த கர்லிங் கோப்பை இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியை மான்செஸ்டர் சிட்டி சந்தித்தது. பிற்பாதியில் 49வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபெர்னான்டின்ஹோ முதல் கோல் அடிக்க, அதற்கு 83வது நிமிடத்தில் லிவர்பூலின் ஹட்டின்ஹோ பதிலடி கொடுத்தார். 90 நிமிட ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கர்லிங் கோப்பையை கைப்பற்றியது. கர்லிங் கோப்பையை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இது 2வது முறை. கடந்த 2006ம் ஆண்டுக்கு பிறகு லிவர்பூல் அணியால் ஒரு கோப்பையை கூட கைப்பற்ற முடியவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
 

பிரீமியர் லீக்கில்,  நேற்று ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி,  ஆர்சனல் அணியை எதிர்கொண்டது. மான்செஸ்டர் யுனைடெட்டின் ரேஷ்ஃபோர்ட் 29 ,32வது நிமிடங்களில் தொடர்ச்சியாக இரு கோல்கள் அடித்தார். 40வது நிமிடத்தில் டேனி வெல்பேக் ஆர்சனலுக்கான முதல் கோலை அடித்தார். பிற்பாதியில்  ஹெரைரா மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கான 3வது கோலை அடித்தார்.

தொடர்ந்து 69வது நிமிடத்தில் ஆர்சனலின் மெசூத் ஒசில் ஒரு கோல் அடித்தார். மேற்கொண்டு ஆர்சனல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை ஈட்டியது. பிரீமியர் லீக்கில் ஆர்சனல் 51 புள்ளிகளுடன்  3வது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 44 புள்ளிகளை பெற்றுள்ளது. லியாஸேஸ்டர் சிட்டி 56 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஸ்பானீஷ் லீக்கில் பார்சிலோனா அணி செவியா அணியை சந்தித்தது. கேம்ப்நியூ மைதானத்தில் நடந்த ஆட்டத்தில்  20வது நிமிடத்தில் விடாலோ, செவியா அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த 11வது நிமிடத்தில்  மெஸ்சி, ப்ரீ கிக் கோல் வழியாக பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 48வது நிமிடத்தில் ஜெரார்ட் பிக்கே பார்சிலோனாவுக்கான வெற்றி கோலை அடித்தார்.

மாட்ரிட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அத்லெடிகோ மாட்ரிட் ரியல்மாட்ரிட் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த தோல்வியை அடுத்து ரியல்மாட்ரிட்டின் ஸ்பானீஷ் லீக் கனவு முடிவுக்கு வந்து விட்டது. ஸ்பானீஷ் லீக்கில் தற்போது பார்சிலோனா 66 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அத்லெடிகோ மாட்ரிட் 56 புள்ளிகளையும் ரியல்மாட்ரிட் 54 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

இத்தாலி சீரி 'ஏ' தொடரில் நேற்று டூரின் நகரில் நடந்த ஆட்டத்தில் யுவான்டஸ் - இன்டர்மிலன் அணிகள் மோதின. இந்த போட்டியில் 47வது நிமிடத்தில் லியார்னடோ பானுச்சியும் 84வது நிமிடத்தில் அல்வாரோ மாரட்டாவும் யுவான்டசுக்கான கோல்களை அடித்தனர். இந்த தொடரில் யுவான்டஸ் 61 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இன்டர்மிலன் 48 புள்ளிகளையே பெற்றுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close