Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பைத்தியத்தை கேப்டனாக வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியாது: அப்ரிடியை விமர்சித்த நடிகை!

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷில் நடந்து வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

இந்த போட்டியை டிவியில் பார்த்து, ஆத்திரமடைந்த அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை அடித்து உடைத்தனர். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியதோடு, பல்வேறு இடங்களில் கொடும்பாவிகளையும் எரித்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிடியை பைத்தியம் என அந்நாட்டு டிவி நடிகை குவான்டீல் பலூச் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இதுபோன்ற பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் யாரையும் ஜெயிக்க முடியாது. விரைவில் உலகக் கோப்பை போட்டியும் வரப்போகிறது. இப்படிப்பட்ட நிலையில் நமது அணியின் நிலையை பாருங்கள். வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது'' என்றார்.

டிவி நடிகை குவான்டீல் பலூச்சின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ