Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியர்களை அவமதித்தாரா மார்ட்டினா நவ்ரட்டிலோவா ?: ட்விட்டர் காரசாரம்!

பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரட்டிலோவா இந்தியாவையும்,  இந்திய அரசியல் சூழலையும் அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளார் என அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

ஜே.என்.யூ மற்றும் வேறு சில பல்கலைக்கழங்களில் வெடித்துள்ள மாணவர் போராட்டங்கள் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் ஆளும் அரசை சாடும் வகையில் எழுதப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இரண்டு கட்டுரைகளை,  பிப்ரவரி 22-ம் தேதி மார்ட்டினா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அதிலிருந்து இவர் கருத்துக்கு எதிரான காரசாரமான பதிவுகளை ட்விட்டரில் பலர் பதிவேற்றி,  இவரை வசைபாடி  வருகின்றனர். ‘டென்னிஸ் பற்றி மட்டும் பேசவும், இதை பற்றி பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது’ போன்றெல்லாம் பலரும் பின்னூட்டமிட இதற்கு பதிலளித்துள்ளார் மார்ட்டினா.

செகோஸ்லோவோக்கியாவில் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்த தனக்கு கருத்து சுதந்திரம் கூட இல்லாமல் வாழ்வது எவ்வளவு வேதனை என்பது தெரியும் எனவும், மிரட்டலும் வன்முறையும் ஒரு போதும் வெற்றிபெறாது என்பதைதான் பதிவிட்டேன் எனவும் கூறியுள்ளார் மார்ட்டினா.

இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த நாட்டிற்கும் பொருந்தும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் நடந்து வரும் மாணவர் போராட்டத்தை பற்றியும், அதனை எதிர்க்கும் அரசை பற்றியும் தனக்கு முழுதாக தெரியாதென்றும், இந்தியர்கள் எதை செய்ய வேண்டும் எனவும்செய்ய கூடாதென்று  தான் சொல்ல எத்தனிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர்  பட்டத்தை 18 தடவை வென்றவர் மார்ட்டினா நவ்ரட்டிலோவா என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் போட்டிகளில் செக் குடியரசு வீராங்கனை மார்டினா நவ்ரட்டிலோவா தான் தமது முன்னுதாரணம் என்று இந்திய வீரர் லியாண்டர் பயஸ்குறிப்பிட்டிருக்கிறார்.

1965 ல் இருந்து 2005 வரை வாழ்ந்த டென்னிஸ் வீராங்கனைகளில் மிகச் சிறந்த வீராங்கனை மார்ட்டினா என ‘டென்னிஸ்’ பத்திரிகை இவரை குறிப்பிட்டிருந்தது.

அப்சல் குருவை தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் கருத்து கூறியதில் ஆரம்பித்த ஜே.என்.யூ விவகாரம், தேசத்துரோகம், மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் கைது என படிப்படியாக நகர்ந்து,  ஆளும் பி.ஜே.பி அரசில் பேச்சுரிமை கூட பறிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளைத் தாண்டி மெல்ல உலகளாவிய கவனத்தை பெற்று வருகிறது.

-கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close