Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: விஸ்வரூம் எடுத்தது வங்கசேதம்- விரட்டப்பட்ட பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்க தேசம் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அகமத் (58), சானியா மிர்சா கணவர் சோயிப் மாலிக் (41) ரன்கள் எடுத்தனர். கேப்டன் அப்ரிடி டக் அவுட் ஆனார்.
 

வங்க தேசம் தரப்பில் உஷைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அராபத் 2, அகமத், மாஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய வங்க தேசம் அணி வீரர்கள் அபாரமாக விளையாடி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த அணியில் சர்கர் அபாரமாக விளையாடி 48 ரன்கள் எடுத்தார்.  மக்முதுல்லா 15 பந்தில் 22 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். 

48 ரன்கள் எடுத்த சர்கர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புள்ளிகள் பட்டியலில் இந்தியா 3 வெற்றியுடன் முதலிடத்திலும், வங்க தேசமும் 3 வெற்றியுடன் 2வது இடத்திலும், ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் இலங்கை அணி 3வது இடத்திலும், பாகிஸ்தான் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 4வது இடத்திலும், ஐக்கிய அரபிக் எமிரேட்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்திலும் இருக்கிறது.

இன்னும் லீக் போட்டி இருந்தாலும் இந்தியா- வங்கதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இறுதிப்போட்டி வரும் 6ம் தேதி டாக்காவில் நடக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ