Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக டேபிள் டென்னிஸ் : இந்திய ஆடவர், மகளிர் அணிகள் சாதனை!

லேஷியாவின் கோலாலம்பூரில் உலக டேபிள் டென்னிஸ்  இரண்டாவது டிவிஷன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரே நாளில் இரண்டு சாதனைகளை இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள்  நிகழ்த்தியுள்ளன. மகளிர் அணி லக்ஸம்பர்க் அணியை 3-1 என்ற செட் கணக்கில் தங்கம் வென்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.

இரண்டு அணிகளுமே தங்களுக்கான இரண்டாவது பிரிவில், 2016ற்கான உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி உள்ளன.இந்திய மகளிர் அணி, லக்சம்பர்க் அணியை 3-1 என்ற செட் கணக்கில் வென்றது. அதே நேரத்தில், ஆடவர் அணியும் பிரேசில் அணியை 3-2 என்ற செட் கணக்கில் வென்று ஆடவர் அணியும் தங்கம் வென்றது.  முதல் போட்டியில் நைஜீரியாவிடம் தோற்றுப் போனாலும், பின்னர் வந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, இந்த உயரத்தை எட்டியுள்ளது.

மகளிர் பிரிவில் நேற்று நடந்த இப்போட்டியில் அனுபவம் மிக்க வீராங்கனையான மௌமா தாஸ், டேனியல் கோர்ன்ஸ்ப்ருக்கை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். வெள்ளிக் கிழமை ஆட்டத்தில் சரியாக விளையாடாத மனிகா பத்ரா கூட, நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் தன ஃபார்முக்கு திரும்பினார். டெஸ்ஸியுடன் நடந்த மோததில் 2-0 என்ற முன்னிலையில் இருந்தாலும், அதன் பின் டெஸ்ஸி ஒரு புள்ளி ஜெயிக்க, 3-1 என்ற கணக்கில் மீண்டும் சீறிப் பாய்ந்து போட்டியை முடித்தார்.

இந்திய அணி, ஆடவர் பிரிவில் இரண்டு கடினமான போட்டிகளைக் கொண்ட முந்தைய நாள் ஆட்டத்தில் விளையாடிய அசந்தா சரத் கமலுக்கு, ஓய்வளித்தது. ஆனால், அந்த முடிவு தவறு என பாதி ஆட்டத்திலேயே தெரிய வரும் அளவிற்கு  திணறிப் போனது. 1-2 என்றிருந்த புள்ளிகளில், சௌமியாஜீத் கோஷின் தோல்வியைத் தொடர்ந்து ஹர்மீத் தேசாய் ஒரு புள்ளி எடுத்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலை அந்தோனி அமல்ராஜ் 2-1 என்ற கணக்கில் இருந்த போது எதிர்பாராத விதமாக, தியாகோ மாண்டேரியோவுடன் தோற்றது, இந்திய அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் வந்த கோஷ் 3-0 என்ற கணக்கில் வென்று, அணியின் நம்பிக்கைகளுக்கு உயிரூட்ட, இறுதியில் தீர்மானிக்கப் போகும் செட்டில் ஹர்மீத் 15-13 என்ற கணக்கில் வென்றார்.

மு.சித்தார்த்

(மாணவப் பத்திரிகையாளர்)
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close