Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி20 ஆசிய கோப்பை: இந்தியா சாம்பியன்!

டி20 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசிய கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டம் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. மழையால் ஆட்டம் 15 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் இந்தியா டாஸ் வென்று வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
 

 

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120  ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து இறங்கிய கோலி தவானுடன் பொறுப்புடன் விளையாடினார். இந்நிலையில் மெதுவாக விளையாடி வந்த தவான் அதிரடியாக விளையாட ஆரம்பித்து அரை சதம் அடித்தார். சிறப்பாக விளையாடி வந்த தவன் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 

 

இதனை தொடர்ந்து கேப்டன் டோனி களம் இறங்கினார். அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி வழி வகுத்தார்.  விராட் கோலி 41 ரன் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார்.

இறுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 ஆசிய கோப்பை சாம்பியம் பட்டத்தையும் கைப்பற்றியது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close